அமாவாசை பித்ருகளுக்கு மிகவும் உகந்த நாளாகும். அம்மாவாசை நாள் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், அவர்களது ஆசியை முழுமையாக பெறலாம். அமாவாசை நன்னாளில் புனித நதிகளில் நீராடுவதும், பித்துக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அன்னதானங்கள் செய்வதும் பலவகையான தோஷங்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்பது நம்பிக்கை. நாளை மார்ச் மாதம் பத்தாம் தேதி, வரும் அமாவாசை தினத்தில், பித்ருக்களின் ஆசியைப் பெறவும் தோஷங்கள் அனைத்தும் நீங்கவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வரும் நாள் அமாவாசை. உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், அமாவாசை நாளில் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் தினத்தன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள் என்பது நம்பிக்கை.
அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை
1. அம்மாவாசை நன்னாள் அன்று பிண்ட தானம் செய்வதும், பித்ரு தர்ப்பணம் செய்வதும் முன்னோர்கள் ஆசையை கொண்டு வந்து சேர்க்கும்.
2. அமாவாசை பித்ரு தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது மிகவும் நல்லது.
3. அந்தணர்களுக்கு உணவு, வஸ்திரம், தக்ஷனை வழங்குவது முன்னோர்கள் மனதை மகிழ்விக்கும்.
4. காகம், பசு, எறும்புகள் ஆகியவற்றுக்கு உணவளிப்பது பலன் தரும்.
5. முன்னோர்கள் ஆசி பெற பித்ரு காயத்ரி செய்வதும் பலன் தரும்
6. மாசி அமாவாசை நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும், தோஷங்கள் அனைத்தும் நீங்க நல்வாழ்வு பிறக்கும்.
7. அமாவாசை நன்னாளில், காலையில் குளித்து, வேப்ப மரத்துடன் இணைந்த அரச மரத்தை சுற்றி வருவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை அன்று மறந்தும் கூட செய்யக் கூடாதவை
அமாவாசை இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். புண்ணிய தினத்தன்று, விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் நினைத்தது நிறைவேறும். இந்த நாளில் பின்வரும் செயல்களைத் தவிர்ப்பது மிக அவசியம். இல்லை என்றால் பலன்கள் கிடைக்காது. பாவங்களை போக்கி பித்ருக்களின் ஆசியை பெற்றுத் தரும் அமாவாசையில் கீழ்கண்டவற்றை செய்யக் கூடாது
1. இந்த நாளில் யாரையும் அவமதிக்கவோ, மனம் புண்படும் படி நடக்கவோ கூடாது. யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
2. இந்த நாளில் முன்னோர்கள், கடவுளுக்கு படைக்காமல் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும்.
3. அமாவாசை நாளில் வெகுநேரம் வரை தூங்க வேண்டாம். பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்தல் சிறந்தது.
4. அமாவாசை உடல் உறவு கூடாது. மறந்தும் கூட இறைச்சி, மது அருந்த கூடாது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ