சனி நட்சத்திர பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் அதிக காலம் இருக்கும் இவர் ராசிகளிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றார். சனி பகவானின் அனைத்து வித மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வகை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இவரது ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கும்.
சனி பகவான் தற்போது ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் உள்ளார். அவர் இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 17 வரை இருப்பார். சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் அசுப யோகம் உருவாகியுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில், சனி மற்றும் ராகு இரண்டும் மிக முக்கியமான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இந்த இருவரின் இயக்கங்களிலும் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் நிச்சயம் பாதிக்கும். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாகவும் ராகு எப்போதும் எதிர் திசையில் அதாவது வக்ர நிலையில் நகரும் கிரகமாகவும் உள்ளனர். ராசி மாற்றங்களைத் தவிர இவ்விரு கிரகங்களின் நட்சத்திர மாற்றங்களும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும்.
சனி தற்போது கும்ப ராசியில். சதய நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்த நட்சத்திரம் ராகுவுக்குரியது. சனி அக்டோபர் 17 வரை ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பார். சனி சதய நட்சத்திரத்தில் இருப்பதால் சனி-ராகு சேர்க்கை காரணமாக அசுப யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்கள் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கன்னி ராசி:
ராகுவின் ராசியில் சனியின் வருகையால் கன்னி ராசிக்காரர்கள் அக்டோபர் 17 வரை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களது பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் பண இழப்பையும் சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த வேலையிலும் வெற்றி பெற மாட்டீர்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | சுக்கிரன் - சூரியன் சேர்க்கை... ராஜபங்க யோகத்தை பெறும் சில அதிர்ஷ்ட ராசிகள்!
விருச்சிக ராசி
சனி-ராகு இணைவது விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்திலும் மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம், இதனால் இழப்புகள் ஏற்படலாம். விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபர் 17ம் தேதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். சனியின் தீய பலன்களால் நீங்கள் சாலை விபத்துகளை எதிர்கொள்ளலாம். ஆகையால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மீன ராசி
சதய நட்சத்திரத்தில் சனி-ராகு இணைவதால் மீன ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் சில பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப உறுப்பினர் நோய்வாய்ப்படலாம். சனி-ராகுவின் தீய பலன்களால், மீன ராசிக்காரர்கள் கடுமையான நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் ஆடம்பரமும் அதிகரிக்கலாம், இதன் காரணமாக பண விரயம் அதிகமாகலாம். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். உங்கள் உறவுகளிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகவும் விசேஷமானது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ