மகா சிவராத்திரி 2025 அன்று இந்த 5 ராசிகளுக்கு சிவன்-பார்வதி அருள் 100% கிடைக்கும்!

Maha Shivaratri Special: இந்த ஆண்டில் வரக்கூடிய சிவராத்திரி 2025 என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய மிக மிக சிறப்பு வாய்ந்த ஒரு சிவராத்திரி ஆகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 24, 2025, 12:14 AM IST
மகா சிவராத்திரி 2025 அன்று இந்த 5 ராசிகளுக்கு சிவன்-பார்வதி அருள் 100% கிடைக்கும்! title=

Maha Shivaratri 2025 News In Tamil: மகாசிவராத்திரி 2025 அன்று ஈசனுடைய அருளை பரிபூரணமாக பெற்று தன் வாழ்வில் முன்னேற்றம் அடைய இருக்கும் ஐந்து ராசிக்காரர்களைப் பற்றித்தான் தெரிந்துக்கொள்ளுவோம். பிப்ரவரி 26, புதன்கிழமை அன்று ஈசனுக்கே உரித்தான சிவராத்திரி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. எனவே மகா சிவராத்திரி 2025 சிறப்பு என்ன? சிவனின் அருள் எந்த ராசிக்கு கிடைக்கும்? போன்ற விவரங்களை பார்ப்போம்.

சிவராத்திரி 2025 ஏன் சிறப்பு வாய்ந்தது?

இந்த ஆண்டில் வரக்கூடிய சிவராத்திரி 2025 என்பது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய மிக மிக சிறப்பு வாய்ந்த ஒரு சிவராத்திரி ஆகும். எனவே சிவராத்திரி தினம் அன்று சில கிரக நிலைகளில் ஏற்படக்கூடிய மாற்றத்தின் காரணமாக ஐந்து ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியினுடைய அருள் 100 சதவீதம் கிடைக்குமாம். 

ஐந்து ராசிக்காரர்களுக்கு ஈசனுடைய கருணை இடைக்கும்?

இதன் காரணமாக இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இந்த சிவராத்திரி தொடங்கி அடுத்த ஓராண்டு காலத்திற்கு பொற்காலமாக விளங்கும் எனக் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு இயல்பாகவே ஈசனுடைய கருணை கிடைக்க இருப்பதால் இவர்களுடைய வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பமயமான ஒரு வாழ்க்கையை வாழ்வார்கள். 

சிவபெருமானின் அருளை பெறும் ஐந்து ராசிக்காரர்கள் யார்?

சிவராத்திரி 2025 என்பது இதுநாள் வரை வந்த சிவராத்திரிகளை காட்டிலும் அதீத சிறப்பு மிக்க விசேஷங்கள் வாய்ந்த ஒரு சிவராத்திரியாக விளங்குகிறது. இதனால் அனைத்து சிவபக்தர்களும் சிவராத்திரி தினம் அன்று விரதமிருந்து முறைப்படி வழிபாடுகள் செய்து வந்தீர்கள் என்றால், அனைவருக்கும் அந்த ஈசனுடைய கருணையும், கடாட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

மேஷம்

மேஷ ராசி என்பது பிறப்பிலேயே சிவனின் அருளை பரிபூரணமாக பெற்ற ஒரு ராசி என ஜோதிட சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஆண்டில் வரக்கூடிய சிவராத்திரி தினம் அன்று இவர்களுக்கு இன்னுமே அதிகமாக ஈசனுடைய கருணை கிடைப்பதால், இவர்களின் வாழ்வில் இதுநாள் வரை இருந்து வந்த துன்பங்கள் விலகி ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்க இருக்கு. அதுமட்டுமில்லாமல் இந்த மேஷ ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே ஒரு சிவபக்தர்களாகத்தான் பெரும்பாலும் இருப்பாங்க அதனால இவர்களுக்கு அந்த பார்வதி தேவியினுடைய கடாட்சமும் 100% கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதனால இந்த மேஷ ராசியில் பிறந்த நபர்கள் இந்த ஆண்டில் வரக்கூடிய சிவராத்திரி தினத்தை தவறவிடாமல் சிவ வழிபாடு செய்தீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் அனைத்தும் நன்மையாகவே நடக்கும். 

மிதுனம்

இரண்டாவதாக மிதுன ராசி. இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கும் இந்த ஆண்டின் சிவராத்திரி அன்று சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்க இருக்கிறது. இவர்களுடைய வாழ்வில் இதுநாள் வரை இருந்து வந்த இன்னல்கள் விலகும். அதே சமயத்தில் குடும்ப வாழ்க்கையில் அதிக ஒற்றுமையும், காதல் வாழ்க்கையில் இருந்து வந்த இடையூறுகளும் விலகும். அதே சமயத்தில் தொழில் ரீதியான முன்னேற்றங்களும் ஏராளமாக நிகழுமாம். ஆடினால் இந்த மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிவ வழிபாட்டை சிவராத்திரி தினம் அன்று மனப்பூர்வமாக செய்தால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும் என்பது நம்பிக்கை.

கடகம்

மூன்றாவது கடக ராசி. கடகம் ராசி என்பது பார்வதி தேவியின் அம்சம் பொருந்திய ஒரு ராசியாக ஜோதிட விதிகளில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த ஆண்டின் சிவராத்திரி அன்று பார்வதி தேவியினுடைய அருள் இந்த கடக ராசியின் மீது பரிபூரணமாக கிடைக்க உள்ளது. அதோடு ஈசனுடைய பார்வையும் இந்த கடக ராசியின் மீது விழுவதால், இவர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக ஏற்படும். அதுமட்டுமில்லாமல் பணம் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகி, இவர்களின் வாழ்வில் வரவு அதிகரிக்கும்.

சிம்மம்

நான்காவது சிம்ம ராசி. இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கும் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரகசாரங்களின் காரணமாக சிவராத்திரி தினம் அன்று ஈசனுடைய கருணை பரிபூரணமாக கிடைக்க உள்ளது. அதனால் இவர்களின் வாழ்வில் ஒருவிதமான நிம்மதியும் அமைதி உணர்வும் ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் இதுநாள் வரைக்கும் நினைத்தது தடைப்பட்டு போன காரியம் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை காணும் என சொல்லப்படுகிறது. இந்த சிம்ம ராசியில் பிறந்த அன்பர்களும் சிவ வழிபாட்டை மனப்பூர்வமாக செய்தீர்கள் என்றால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 

கும்பம்

ஐந்தாவது கும்ப ராசி. இந்த கும்ப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிவன் மீதும், சிவ வழிபாட்டின் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் இந்த கும்ப ராசிக்காரர்கள் சிவ அம்சம் பொருந்திய ஒரு ராசியாகவும் விளங்குகிறது. அதனால் இந்த ஆண்டில் வரக்கூடிய சிவராத்திரி தினத்தில் இவர்களுக்கும் அதிகப்படியான நன்மைகள் நிகழ இருக்கிறது. கும்ப ராசி அன்பர்கள் சிவ வழிபாட்டை தொடர்ச்சியாக மனமுகந்து செய்து வந்தீர்கள் என்றால், மென்மேலும் வாழ்வில் முன்னேற முடியும்.

மேலும் படிக்க - Maha Shivratri 2025 | சிவபெருமானுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் எது தெரியுமா? காரணம் என்ன?

மேலும் படிக்க - மகா சிவராத்திரி 2025: சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், செல்வச்செழிப்புடன் வாழவைப்பார் ஈசன்

மேலும் படிக்க - மகா சிவராத்திரி 2025: ஈசனின் அருளால் இந்த ராசிகளுக்கு இனி ஏற்றம், இமயம் போல் வளர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News