ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய 20 ஓவர் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை முடித்த கையோடு நியூசிலாந்து சென்று இருக்கும் இளம் படை, அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஒவர் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி வெள்ளிகிழமையான இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்திருக்கும் புவனேஷ்வர்குமார், இந்த தொடரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஓராண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இடம்பிடிப்பார்.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் வித்தையை கற்று அவருக்கே ஆப்பு வைக்க ரெடியான இளம் வீரர்
புவனேஷ்வர் குமார் இந்த ஆண்டில் இந்திய அணிக்காக விளையாடி இதுவரை 36 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அயர்லாந்து வீரர் லிட்டில் 39 விக்கெட்டுகளை 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் மட்டும் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் புவனேஷ்வர் குமாருக்கு, ஓராண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்க புவனேஷ்வர் குமாருக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
மொத்தம் 3 போட்டிகள் இருப்பதால், இந்த சாதனையை படைக்க புவனேஷ்வர்குமாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், இந்திய அணிக்காக 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் புவனேஷ்வர் குமார் வசம் இருக்கிறது. இதுவரை 85 போட்டிகளில் விளையாடிருக்கும் அவர் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ