Team India Bowling Coach: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரோடு நிறைவடைந்தது. ராகுல் டிராவிட் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பாத நிலையில், அந்த பொறுப்பு இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்டர் கௌதம் கம்பீருக்கு வழங்கப்பட்டது. கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இந்திய அணி பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது.
டி20 அணியில் சீனியரான ஹர்திக் பாண்டியா இருக்கும் போதே, சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை பெற்றார். இதேபோல், ஓடிஐ, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கட்டமைப்பில் தொடர்ந்து மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, துலிப் டிராபியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இது கௌதம் கம்பீர் - அஜித் அகர்கர் (தேர்வுக்குழு தலைவர்) ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது. அதேபோல், உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் கம்பீரின் ஆஸ்தான பௌலர்
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர் தனது உதவிக்கு பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இந்திய அணியுடன் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பந்துவீச்சுக்கு மட்டும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் டாப் 10 இடது கை பேட்டர்கள்... அசைக்க முடியாத ஆலமரங்கள்!
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான மார்னே மார்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கௌதம் கம்பீருடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டவர். மேலும், கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கியபோது மார்னே மார்கல்தான் அவரின் ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.
Gautam Gambhir got all the coaching staff he wanted. Abhishek Nayar, Ryan ten Doeschate and now Morne Morkel. ICC trophy is must. pic.twitter.com/hoLt9xJBFb
— R A T N I S H (@LoyalSachinFan) August 14, 2024
பட்டைத்தீட்டப்படும் மார்னே மார்கல்
மார்னே மார்கல் இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டுபவர். இவர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக கடந்த டிசம்பர் மாதம் வரை செயல்பட்டு வந்தார். இவரின் தலைமையில் பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சில் மீண்டும் புத்துணர்ச்சியை பெற்றது. தற்போது இந்திய அணிக்கு அதுவும் கௌதம் கம்பீர் உடன் களமிறக்கியிருப்பதால் இந்திய அணி வேகப்பந்துவீச்சு பலமாகும் என எதிர்பார்க்கலாம். பல இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்னே மார்கலால் பட்டைத் தீட்டப்படுவார்கள். மார்னே மார்கல் தென்னாப்பிரிக்கா அணிக்காக சர்வதேச அளவில் டெஸ்டில் 309 விக்கெட்டுகளையும், ஓடிஐயில் 188 விக்கெட்டுகளையும், டி20இல் 47 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
மேலும் படிக்க | ரிஷப் பந்த் லெஜண்டா? அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த ஹேட்டர்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ