IND vs SL T20 Series: மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களை விளையாட இந்திய அணி இலங்கைக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் 27ஆம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 28ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும் மற்றும் 30ஆம் தேதி மூன்றவது டி20 போட்டியும் நடக்கிறது. ஆக. 2, 4, 7 ஆகிய தேதிகளில் மூன்று ஓடிஐ போட்டிகள் கிடைக்கிறது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் தொடர் இதுவாகும். டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின் இந்திய டி20 அணி பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது.
இந்திய அணிக்கு அக்னிப்பரீட்சை
டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்ற பெருமையை தக்கவைக்க இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டிவரும். மேலும், 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் பொறுப்பு கம்பீருக்கு உள்ளதால், அதற்கான தயாரிப்புகளும் இப்போது இருந்தே தொடங்கிவிடும் எனலாம். ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படும் அளவிற்கு திறமைவாய்ந்த மற்றும் அனுபவமிக்க வீரர்கள் நிரம்பி வழிகிறார்கள் என்பதால் ஒவ்வொரு தொடரும் அக்னிப்பரீட்சையே எனலாம்.
மேலும் படிக்க | IND vs SL: இந்தியா vs இலங்கை தொடர்! காயம் காரணமாக முக்கிய வீரர் விலகல்!
இவை ஒருபுறம் இருக்க, நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பையில் தொடக்க சுற்றோடு வெளியேறிய இலங்கை அணியும் பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது எனலாம். ஹசரங்காவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டது. சதீரா சமரவிக்ரம, தனஞ்செய டி செல்வா என டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆஞ்சலோ மேத்யூஸ் இனி டி20 அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பும் இல்லை. இளம் வீரர்களை கொண்டு அடுத்த 2 ஆண்டுக்கான திட்டங்களுடன் இலங்கை அணி களமிறங்கியிருக்கிறது.
கம்பீர் vs ஜெயசூர்யா
அதேபோல், இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் இலங்கை டி20 அணியை பலமானதாக உருமாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனலாம். எனவே, தற்போதைக்கு கம்பீர் vs ஜெயசூர்யா என்ற ரீதியில் இந்த டி20 தொடர் அணுகப்படுகிறது. அந்த வகையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ள இலங்கை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் இயக்குநர் ஜூபின் பருச்சாவின் உதவியை நாடியுள்ளது.
இதுகுறித்து ஜெயசூர்யா கூறுகையில்,"லங்கன் பிரீமியர் லீக் (LPL) முடிந்தவுடன் நான் பயிற்சியை தொடங்கினோம் அனைத்து வீரர்களுமே அதிக போட்டிகளில் விளையாடுகின்றனர். எங்களுக்கும் அவர்கள் முடிந்தவரை நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே விருப்பமாகும்.
மேலும் எங்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜூபின் பருச்சா பணியாற்றினார். ஏறத்தாழ அணியுடன் ஆறு நாள்கள் அவர் பணிபுரிந்தார். மேலும் அவரிடம் இருந்து வீரர்கள் நிச்சயம் கற்றுக்கொண்டிருப்பார்கள். புது புது நுட்பங்களை வீரர்கள் கற்க வேண்டியது முக்கியமாகும். இது பேட்டிங்கில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
யார் இந்த ஜூபின் பருச்சா?
ஜூபின் பருச்சா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் ஆவார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவர்களில் முக்கியமானவர் எனலாம். இவர் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டர்கள் ஆறு நாள்கள் பயிற்சி மேற்கொண்டு, இந்திய அணிக்கு எதிராக புதிய புதிய நுட்பங்களை பயன்படுத்த தயாராகியிருப்பது தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ