Rohit Sharma News Tamil | பெங்களுரு டெஸ்ட் மேட்ச் தோல்விக்கு முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டானது தான் காரணம் என கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். பெங்களூரு டெஸ்ட் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் எடுத்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறினார். சூழ்நிலையை சரியாக நான் கணிக்கவில்லை, இருந்தாலும் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டாவோம் என நினைக்கவே இல்லை என்றும் என்றும் ரோகித் சர்மா தெரிவித்தார். இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. மூன்று போட்டிகள் கொண்ட முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை தழுவியிருப்பதால், 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது.
புனே டெஸ்ட் போட்டி மீது நம்பிக்கை
ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, " கிரிக்கெட் போட்டிகளில் இப்படியான ஆட்டங்களும் இருக்கும். அதனால் தோல்வியை மறந்து அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் தோற்றோம். ஆனால், அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றினோம். அதைப் போலவே இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் மீண்டு வருவோம். புனே டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம்" என நம்பிக்கை தெரிவித்தார்.
ரிஷப் பந்த், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ்
இந்த போட்டியில் தோல்விடையந்ததற்கு யாரையும் குறிப்பிட்டு காரணம் சொல்லாத ரோகித் சர்மா, அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என நன்றாக தெரியும் என கூறினார். இந்த டெஸ்ட் போட்டியிலேயே இவ்வளவு தூரம் வந்ததற்கு இரண்டு பிளேயர்கள் மட்டுமே காரணம் என ரிஷப் பந்த், சர்பிராஸ் கான் பெயரை குறிப்பிட்டு சொல்லி அவர்களை வெகுவாக பாராட்டினார். அவர்கள் இருவரும் 170 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்திருந்தால் இந்த போட்டி இவ்வளவு தூரம் வந்திருக்காது என தெரிவித்த ரோகித் சர்மா, ரிஷப் அவருடைய ஷாட்டை சிறப்பாக ஆடினார், சர்பிராஸ் கான் நான்காவது போட்டியிலேயே மிகவும் முதிர்ச்சியுடன் விளையாடுகிறார் என பாராட்டு தெரிவித்தார்.
இந்திய அணியில் இடம் கன்பார்ம்
ரோகித் சர்மாவின் இந்த பாராட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த், சர்பிராஸ்கான் ஆகியோர் தங்களின் இடத்தை உறுதி செய்திருக்கின்றனர். அவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது உறுதி என்பதால், இப்போதைக்கு கேஎல் ராகுலின் இடம் தான் கேள்விக்குறியாகியுள்ளது. அவர் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் ஒழுங்காக ஆடவில்லை. அதனால், அவருக்கு பதிலாக அடுத்த போட்டியில் சுப்மன் கில் பிளேயிங் லெவனுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.
புனே டெஸ்ட் போட்டி எப்போது?
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான புனே டெஸ்ட் போட்டி 24 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒருவேளை தோல்வியை தழுவினால் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியிடம் இழப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதும் கேள்விக்குறியாகும். இதனை மனதில் வைத்து இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் களம் காண இருக்கிறது.
மேலும் படிக்க | முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ