புதன்கிழமை சென்னையில் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை இழக்கும் அபாயத்தில் உள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன, 16 புள்ளிகளை எட்ட இன்னும் 3 போட்டிகளில் வெற்றி தேவை. இந்நிலையில், இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட பிளே ஆப்க்கு தகுதி பெருவது கேள்விக் குறியாகிவிடும்.
In the heart of the huddle! #CSKvPBKS #WhistlePodu pic.twitter.com/15xZQ5SpzI
— Chennai Super Kings (@ChennaiIPL) May 2, 2024
மேலும் படிக்க | ஐபிஎல் 2024ஐ விட்டு வெளியேறும் வீரர்கள்! சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு!
சென்னை அணி தடுத்த அடுத்த போட்டியில் பிபிகேஎஸ் அணிக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை தர்மஷாலாவில் விளையாடுகிறது. அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள அகமதாபாத்திற்குச் செல்கிறது, பிறகு சென்னையில் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக விளையாடுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 16 ஐபிஎல் சீசன்களில் 12 முறை பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது சென்னை அணி. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளேஆஃப்களுக்குச் சென்ற சாதனையை சிஎஸ்கே வைத்திருக்கிறது. இதுவரை இரண்டு முறை மட்டுமே பிளேஆஃப்களைத் தவறவிட்டது.
2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்து வந்த எம்எஸ் தோனி இந்த ஆண்டு கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாட்க்கு கொடுத்துள்ளார். இன்று நடைபெறும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றால் சிஎஸ்கே 5வது இடத்திற்கு தள்ளப்படும். செய்யும். டெல்லி கேபிடல்ஸ் 10 புள்ளிகளும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது.
பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிராக மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றால் 18 புள்ளிகளைப் பெற்று பிளேஆஃப்க்கு எந்தவித தடங்களும் இல்லாமல் செல்லலாம். ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத்தை வீழ்த்தினால் சென்னைக்கு கூடுதல் நன்மை. அதே போல அடுத்த போட்டியில் லக்னோ தோல்வி அடைந்தாலும் சிஎஸ்கேக்கு நன்மை தான்.
மேலும் படிக்க | இங்கிலாந்து முதல் இந்தியா வரை! டி20 உலக கோப்பை அணியின் முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ