சென்னை சூப்பர் கிங்ஸ் பிளான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாயில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் நியூசிலாந்து பிளேயர்களை தேடி தேடி வாங்கியது. இந்த ஏலத்தில் மட்டும் டேரி மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை எடுத்திருக்கிறது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் நியூசிலாந்து பிளேயர்களின் எண்ணிக்கை மட்டும் நான்காக உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே மிட்செல் சானட்டர் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர். இப்போது அவர்களுடன் டேரி மிட்செல் மற்றும் மிட்செல் சானட்டர் இணைந்துள்ளனர்.
சிஎஸ்கே ஸ்கெட்சில் டேரி மிட்செல்
டேரி மிட்செல் உலக கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடினார். அவரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. குறைந்த விலையில் அவரை ஏலம் எடுத்துவிடலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்திருந்த நிலையில் சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டி போட்டதால் டேரி மிட்செலுக்கான விலை எகிறிக் கொண்டே சென்றது. முடிவில் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை வாங்கியது. இதேபோல் மற்றொரு நியூசிலாந்து பிளேயரான ரச்சின் ரவீந்திரா 50 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்துக்கு வந்தார். அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் 1.8 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே
ரச்சின் ரவீந்திரா ஒரு நல்ல ஆல்ரவுண்டர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குவார் என்பதால் அவரை குறிவைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் பேசும்போது, டேரி மிட்செலுக்கு குறி வைத்திருந்தோம். அவர் என்ன விலைக்கு வந்தாலும் வாங்கலாம் என்ற முடிவில் இருந்தோம். ஆனால் ரச்சின் ரவீந்திராவுக்கு நாங்கள் அப்படி திட்டம் ஏதும் வைக்கவில்லை. குறைந்த விலையில் கிடைத்தால் வாங்கலாம் என்று மோதிப் பார்த்தோம்.
சிஎஸ்கே அணிக்கு போனஸ்
1.8 கோடி ரூபாய் என்ற குறைந்த விலையிலேயே கிடைத்தார். அவருடைய வருகை என்பது எங்களுக்கு போனஸ் தான்" என தெரிவித்தார். ரச்சின் ரவீந்திரா ஆர்சிபி அணிக்கு விளையாட வேண்டும் என விரும்பினார். ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக பேட்டி கொடுக்கும்போது ஆர்சிபி அணி ஏலம் எடுத்தால் மகிழ்ச்சியடைவேன் என தெரிவித்திருந்தார். ஆனால் அவரை ஏலம் எடுக்க ஆர்சிபி அணி ஆர்வம் காட்டவில்லை. ரச்சின் ரவீந்திராவின் பூர்வீகம் பெங்களூரு என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ