நடப்பு ஐபிஎல் தொடரில் அணிகளுக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குஜராத், லக்னோ என புதிதாக இரு அணிகள் மற்றும் சென்னை, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய அணிகளுக்கு புதிய கேப்டன் என ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்தன இந்த ஐபிஎல்லில்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தவரை, அவ்வணிக்குக் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி கடந்த சீசனுடன் அப்பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ஃபாப் டு பிளெஸியைத் தமது பக்கம் கொக்கி போட்டுத் தூக்கிய பெங்களூர் அணி, அவரைக் கேப்டனாகவும் நியமித்தது.
கடந்த முறை ‘விராட் கோலி- டி வில்லியர்ஸ்- கிளென் மேக்ஸ்வெல்’ என நட்சத்திர வீரர்களைக் கொண்ட அணியாக இருந்த ஆர்சிபி அணி, டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு முடிவால் இம்முறை ‘விராட் கோலி- ஃபாப் டு பிளெஸி- கிளென் மேக்ஸ்வெல்’ என ஆனது. நடப்பு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் யஷ்ஷின் கன்னடப் படமான கேஜிஎஃப் படமும் பெங்களூர் உட்பட இந்திய அளவில் பேசுபொருளாக இருந்துவந்தது.
ஆர்சிபி அணியை வருடாவருடம் வித்தியாசமாகப் புரொமோட் செய்யும் அவ்வணி ரசிகர்கள் இம்முறை கேஜிஎஃப்புடன் ஆர்சிபி அணியைக் கோத்து புது ஐட்டம் ஒன்றை உருவாக்கினார்கள். அதாவது KGFக்கான ஒரிஜினல் விரிவாக்கம் 'Kolar Gold Fields'. இதை அப்படியே ஆர்சிபி அணிக்காக மாற்றிய ரசிகர்கள், ‘Kohli -Glenn- Faf’ அதாவது விராட் கோலி- கிளென் மேக்ஸ்வெல்- ஃபாப் டு பிளெஸி எனும் மீனிங் வருமாறு மாற்றி இணையத்தில் கெத்துக் காட்டினர். சோசியல் மீடியாவில் இந்த மேட்டர் வைரல் ஆனது.
மேலும் படிக்க | தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அவனும் இங்க நான்தானே! என்ன சொல்றார் ஹிட்மேன்?
இந்நிலையில், பெங்களூர் அணிக்கு வந்துள்ள தினேஷ் கார்த்திக் அந்த அணிக்காக ஸ்டார் பிளேயராக அவதாரம் எடுத்துள்ளார். வேற வெவல் ஃபார்மில் உள்ள தினேஷ் கார்த்திக் இந்தத் தொடர் முழுவதும் தாறுமாறாக விளையாடிவருகிறார். 360 டிகிரியில் அடிக்கிற அவரது ஷாட்டுகளை வைத்த கண் வாங்காமல் ரசித்துவருகின்றனர் பார்வையாளர்கள். போதாக்குறைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் இந்த முறை தொடர்ந்து ஏமாற்றிவருகிறார்.
இந்நிலையில் KGF இல் K எனும் எழுத்துக்கான விரிவாக்கத்தில் தற்போது சிலர், விராட் கோலிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கின் பெயரை இணைத்து Karthik- Glenn- Faf எனவும் பதிவிட்டுவருகின்றனர். சமூக வலைதளங்களில் இது தற்போது கவனம் பெற்றுவருகிறது. கேஜிஎஃப்-2 வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் பெங்களூர் அணியும் இம்முறை கோப்பையைக் கைப்பற்றுமா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ‘KGF-2’ டீம் செய்த தவறால் கொந்தளிக்கும் தமிழ் ரசிகர்கள்- காரணம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR