மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023 தொடரின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. நடப்பு சாம்பியனும், முன்னாள் சாம்பியனும் முதல் போட்டியிலேயே கோதாவில் குதிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக தோனியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவரது தலைமையின் கீழ் 4 ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்றிருக்கும் சிஎஸ்கே, கடந்த ஆண்டு ஜடேஜா தலைமையில் தொடரின் முதல் பாதியில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை.
மேலும் படிக்க | சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா போட்டி... குறைந்தபட்ச டிக்கெட் விலை தெரியுமா?
இதனால் அவரிடம் இருந்த கேப்டன்சி பொறுப்பு மீண்டும் தோனி வசமே வந்தடைந்தது. 40 வயதுக்கும் மேல் ஆன தோனி ஏறக்குறைய இந்த ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடை கொடுத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டியில் அவரின் ஓய்வு அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் சுழன்றடித்துக் கொண்டிருப்பதால், தோனிக்கு உற்சாகமாக விடை கொடுக்க ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி, சிறந்த கேப்டன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் புனே அணிக்காக விளையாடிய அவர், தோனியுடனான தனது பயணம் குறித்து பேசியுள்ளார். தோனிக்கு ஹூக்கா புகைப்பது மிகவும் பிடிக்கும். அவருடைய அறையில் இந்த புகையை சில முறை கண்டிருக்கிறேன். அவருடன் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சென்று உரையாடலாம். இளம் வீரர்களுடன் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர். ஒருவரின் திறமையை அடையாளம் கண்டுவிட்டால், அந்த இளம் வீரருக்கு நிச்சயமாக வாய்ப்பு வழங்குவார். தோனியின் உரையாடல் பல இளம் வீரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து அணிகளுக்கும் அது சிறந்த உதாரணத்தை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார். அனைத்து விஷயங்களையும் அவரது அறையில் ஜாலியாக வீரர்கள் அரட்டையடிப்பதை நான் பார்த்திருக்கிறேன் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேசிய அணிகளுக்கான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தொடர் முடிவடைந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துவிடுவார்கள். இந்த முறை காயம்பட்ட புலியாக சிஎஸ்கே இருப்பதால், மிகப்பெரிய கம்பேக்கை அவர்கள் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | No.1 T20 Cricket Premier League: உலகின் நம்பர்.1 டி20 கிரிக்கெட் பிரீமியர் லீக் எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ