சமீபத்தில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணியுடன் தனது மூன்று ஆண்டு பயணத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார் ராகுல் டிராவிட். இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என்ற தகவல் 3 மாதங்களுக்கு முன்னரே வெளிவர தொடங்கியது. இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் கம்பீர் போட்டியிடவில்லை. மேலும் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்தார். இருப்பினும், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் கம்பீர் தான் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
மேலும் படிக்க | 'இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்...' விராட் கோலி இல்லை - ஆண்டர்சன் சொன்ன அந்த வீரர் யார்?
It is with immense pleasure that I welcome Mr @GautamGambhir as the new Head Coach of the Indian Cricket Team. Modern-day cricket has evolved rapidly, and Gautam has witnessed this changing landscape up close. Having endured the grind and excelled in various roles throughout his… pic.twitter.com/bvXyP47kqJ
— Jay Shah (@JayShah) July 9, 2024
இந்த வார தொடக்கத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். இந்த மாதம் இறுதியில் நடைபெறும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா அணியுடன் கம்பீர் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறுதி முடியை பிசிசிஐ தான் எடுக்கும். கம்பீர் ஏற்கனவே உள்ள பயிற்சியாளர்கள் யாரும் வேண்டாம் என்றும் புதிதாக சிலரை எடுக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி பந்துவீச்சு பயிற்சியாளராக வினைக்குமாரையும், பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்சையும் நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் பிசிசியிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் பந்து வீச்சு பயிற்சியாளராக வினைக்குமாரை நியமிக்க பிசிசிஐ சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோர்னே மோர்கல் கடந்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவு இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாட்டுள்ளார். மேலும் லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கள் பந்துவீச்சு பயிற்சியாளராக சேர்க்கப்பட்டார்.
பிறகு இந்த ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு கம்பீர் மாறினாலும் மோர்கல் தொடர்ந்து லக்னோ அணியுடன் பயணித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு மோர்னே மோர்கல் பற்றி கம்பீர் பேசி உலர். அதில் நான் எதிர்கொண்ட மிக கடுமையான பந்துவீச்சாளர்களில் மோர்களும் ஒருவர் என்றும், அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்றும் தெரிவித்துள்ளார். எனவே தான் அவரை கொல்கத்தா அணியிலும் எடுத்தேன் என்றும் தெரிவித்து இருந்தார். இவர்களை தவிர கம்பீர் தனது ஆதரவு ஊழியர்களில் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரையும் நியமிக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் டி திலீப் போன்றவர்களை தக்கவைக்க பிசிசிஐ விரும்புகிறது. மேலும் மோர்கல் தவிர ஜாகீர் கான், பாலாஜி போன்றவர்களும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ