IND vs AUS 3வது டெஸ்ட்: பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணி தற்போது தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது, இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்த வரையில், கோப்பையை விட அதிகமாக விளையாட வேண்டும், ஏனெனில் ஜூன் 7, 2023 ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஆவலாக உள்ளனர். தொடரில் 3-1, 4-0 என்று வெற்றி பெரும் பட்சத்தில் தகுதி பெற முடியும். மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் விளையாடப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை மகத்தான பேட்டிங் சாதனைகளை பதிவு செய்வதில் உச்சத்தில் உள்ளனர். கோஹ்லி இதுவரை பேட்டிங்கில் அமைதியாக இருந்து வருகிறார், மேலும் அவர் சில ரன்கள் எடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறார். அவர் டெல்லியில் நன்றாக விளையாடினார், ஆனால் எப்படியோ 1வது இன்னிங்சில் எல்பிடபிள்யூ ஆனார். இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் போட்டியில் சிறப்பாக ஆடினார். நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தனது அணிக்காக சதம் அடித்தார். தற்போது நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தான் அதிக ரன் குவித்துள்ளார். ரோஹித் 3 இன்னிங்சில் 183 ரன்களும் சராசரி 61.00 ரன்களும் எடுத்துள்ளார்.
Snapshots from #TeamIndia's training session here in Indore ahead of the third Test match against Australia.#INDvAUS pic.twitter.com/yLmoBLxfYG
— BCCI (@BCCI) February 28, 2023
சர்வதேச அளவில் வேகமாக 25000 ரன்களைக் கடந்த விராட் கோலி, சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்களை எட்ட இன்னும் 77 ரன்கள் மட்டுமே உள்ளது. ரோஹித் மற்றும் கோஹ்லியின் புகழ்பெற்ற ஜோடியைப் பொறுத்தவரை, அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோடியாக 1,000 ரன்களை முடிக்க 44 ரன்கள் மட்டுமே தேவை. மறுபுறம் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டுவதற்கு 45 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், கோஹ்லி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, எம்எஸ் தோனி, வீரேந்திர சேவாக் போன்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் ரோஹித் சர்மாவும் இணைய முடியும். மேலும் தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் ராகுலுக்கு பதிலாக கில் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பாரத் (Wk), இஷான் கிஷன் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ