IND vs Eng: இங்கிலாந்து அணி அபார வெற்றி, வீணானது விராட் கோலியின் அரைசதம்

இங்கிலாந்து டாஸை வென்றதுடன், முதல் நாள் பிட்சில் இருந்த சாதகமான நிலையை நன்றாக பயன்படுத்திக்கொண்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 9, 2021, 03:22 PM IST
  • இங்கிலாந்து அணி இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
  • விராட் கோலி 72 ரன்களும் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தனர்.
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்கும்.
IND vs Eng: இங்கிலாந்து அணி அபார வெற்றி, வீணானது விராட் கோலியின் அரைசதம்  title=

சென்னை: செவ்வாயன்று ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜாக் லீச் 76 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, அரைசதம் அடித்த கேப்டன் விராட் கோலி தனி (Virat Kohli) ஆளாக போராட வேண்டி இருந்தது. எனினும் அவரது போராட்டம் பலனளிக்கவில்லை.

இந்த ஆட்டத்தின் முடிவு, தற்போது நடந்து கொண்டிருக்கும் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் புள்ளிகள் அட்டவணையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் நடக்கப்போகும் இறுதிப் போட்டிக்கான தீவிரம் இன்னும் அதிகமாகி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்னர், இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா இருந்தது. இங்கிலாந்து நான்காவது இடத்தில் இருந்தது. ஆனால் போட்டி முடிந்த பின்னர் இரு அணிகளும் இடம் மாறிவிட்டன.

தற்போதைய நிலையில் இங்கிலாந்து தனது 11 வது வெற்றியைத் தொடர்ந்து தற்போது 70.2 PCT-ஐக் கொண்டுள்ளது. இங்கிலாந்தைத் (Team England) தொடர்ந்து நியூசிலாந்து 70 PCT-யைக் கொண்டுள்ளது. லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் ஆட நியூசிலாந்து ஏற்கனவே தேர்ச்சி பெற்றுவிட்டது.

ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்து ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு செல்லுமா செல்லாதா என்பது தீர்மானமாகும்.

68.3 PCT-யுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

ALSO READ: IND vs Eng: 3-வது டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி, பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இவைதான்:

இந்தியாவின் வாய்ப்புகள்: இந்தியா இந்த தொடரில் 2-0, 2-1, 3-0, 3-1, 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் டெஸ்ட் உலக போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாது.

இங்கிலாந்தின் வாய்ப்புகள்: இங்கிலாந்து தொடரை 4-0, 3-0, 3-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.

ஆஸ்திரேலியாவின் வாய்ப்புகள்:  இங்கிலாந்து 0-1, 0-2, 1-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டும், அல்லது, இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும், அல்லது தொடர் டிராவில் முடிய வேண்டும்.

தொடரின் இரண்டாவது டெஸ்டும் சென்னையிலேயேதான் விளையாடப்படும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச், முதல் போட்டி செல்லச் செல்ல தரம் குறைந்தது. இங்கிலாந்து டாஸை வென்றதுடன், முதல் நாள் பிட்சில் இருந்த சாதகமான நிலையை நன்றாக பயன்படுத்திக்கொண்டது. இங்கிலாந்து அணி ஒரு மிகப்பெரிய முதல் இன்னிங்ஸ் இலக்கை நிர்ணயித்ததுடன் கேப்டன் ஜோ ரூட்டும் ஒரு மறக்கமுடியாத இரட்டை சதத்தை அடித்தார்.

அதைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்தியாவை 337 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். ஃபாலோ ஆன் அளிக்காமல் மீண்டும் ஆட இங்கிலாந்து அணி களமிறங்கியது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. எனினும் அவர்களது முதல் இன்ங்ஸ் ஸ்கோரே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி192 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விராட் கோலி 72 ரன்களும் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்கும்.

ALSO READ: IND vs Eng: ஜடேஜா இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகலாம்: Mark Butcher

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News