மும்பையில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் சர்ச்சைக்குரிய முறையில் அவுட் ஆனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூன்றாவது அம்பயரின் தவறான முடிவால் இந்திய அணி வரலாற்று தோல்வியடைந்துள்ளது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சர்ச்சை அவுட்டால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார். 57 பந்துகளில் 64 ரன்களை எடுத்து இருந்த போது பந்த் அம்பயரின் தவறான முடிவால் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். அதன் பிறகு போட்டி நியூசிலாந்து பக்கம் திரும்பியது.
அஜாஸ் படேல் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றார் பந்த். அப்போது அவரது பேட், பேடில் பட்டது. இதற்கு ஆன்-பீல்ட் அம்பயர் அவுட் தர மறுக்கவே, நியூசிலாந்து ரிவ்யூ எடுக்க மூன்றாவது நடுவர் அவுட் என்று தெரிவித்தார். ரிஷப் பந்த் அவுட்டான பிறகு இந்தியா அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனால் நியூசிலாந்து அணி 3வது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு அணியும் இந்திய மண்ணில் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது இல்லை. அதுமட்டுமின்றி 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது இந்தியா.
Third Class Umpire giving Rishabh Pant's wicket pic.twitter.com/ECd9GlKFoF
— Sagar (@sagarcasm) November 3, 2024
ரோஹித் சர்மா வருத்தம்
ரிஷப் பந்த் அவுட் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா சில காட்டமான பதில்களை கொடுத்துள்ளார். அம்பயருக்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றால், முடிவை பேஸ்ட்ஸ்மேன் பக்கம் கொடுத்து இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். "பந்த் அவுட்டா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது, நாங்கள் எது சொன்னாலும், அது ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் அவுட் குறித்தான உறுதியான ஆதாரம் இல்லை என்றால், களத்தில் உள்ள அம்பயரின் முடிவை ஏற்க வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். நடுவர் அவுட் கொடுக்காத போது, அந்த முடிவு எப்படி மாற்றப்பட்டது என்று தெரியவில்லை.
நான் பேசுவது சரியான விஷயமா என்று எனக்குத் தெரியவில்லை. இது நடுவர்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம். அனைத்து அணிக்கும் ஒரே மாதிரியான விதிகளை வைக்க வேண்டும். ஒவ்வொரு அணிக்காகவும் மனதை அம்பயர்கள் மாற்றக் கூடாது. ரிஷப் பந்த் அவுட் ஆனது போட்டியை மாற்றி அமைத்தது. அந்த சமயத்தில் ரிஷப் பந்த் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். மேலும் அவர் அணியை நிச்சயம் வெற்றி பெற செய்து இருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமான முறையில் அவுட் கொடுத்தது ஏமாற்றம் அளிக்கிறது" என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ