India vs England: தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, கடுப்பாகி கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்

புதிய இளம் வீரர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் பென்சில் அமர்ந்துள்ள நிலையில் புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சரியாக ஆடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2021, 11:45 AM IST
India vs England: தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா, கடுப்பாகி கமெண்ட் போட்ட நெட்டிசன்கள் title=

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மனாக கருதப்படுபவர் புஜாரா.  ஒன்-டவுனில் களமிறங்கும் புஜாரா ஆரம்ப காலங்களில் மிகவும் சிறப்பாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்து வந்தார்.  ஆனால் சமீப காலமாக அவர் தொடர்ந்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார். 

பல ஆட்டங்களில் அவரது வழக்கமான ஆட்டத்தைக் காண முடியவில்லை. இதனால் அவரது ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.  இந்திய அணியின் ‘வால்’, அதாவது, இந்திய அணியின் உறுதியான பேட்ஸ்மேன் என கருதப்படும் ராகுல் டிராவிட்டின் (Rahul Dravid) இடத்தை நிரப்ப புஜாரா கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கோட்டை சேர்ந்த இவர் 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக ஆட்டகாரராக களமிறங்கினார்.  

புஜாரா (Cheteshwar Pujara) கடைசியாக விளையாடிய 10 இன்னிங்சில் (15,8,17,0,7,21,15,73,56,25 ) என்ற கணக்கில் மிகவும் சொர்ப்ப ரன்களை மட்டுமே அடித்து தொடர்ந்து சொதப்பி வருகிறார்.  இவர் டெஸ்டில் சதம் அடித்து 19 போட்டிகள் ஆகின்றன.  2019-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 193 ரன்கள் எடுத்ததே இவர் அடித்த கடைசி சதம் ஆகும்.  

ALSO READ: Tokyo Olympics women's hockey: இந்திய வீராங்கனைகள் போராடி தோல்வி

தற்போது இந்தியா - இங்கிலாந்து தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் புஜாரா ஃபார்மிற்கு திரும்பி நல்ல ஆட்டத்தை வெளிபப்டுத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், 16 பந்துகளில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து புஜாரா வெளியேறினார்.  

புஜாராவைப் போலவே மற்றொரு ஆட்டகாரரான ரஹானேவும் (Rahane) தொடர்ந்து சரியான ஆட்டத்தை வெளிபடுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.  புதிய இளம் வீரர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் பென்சில் அமர்ந்துள்ள நிலையில் புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் தொடர்ந்து சரியாக ஆடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.

புஜாராவின் ஆட்டம் ரசிகர்களை மிகவும் ஏமாற்றி வருகிறது. கடுப்பான நெட்டிசன்கள் ட்விட்டரில் தங்கள் கோவத்தையும் ஏமாற்றத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

 

 

ALSO READ:புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் டக் அவுட் ஆனது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News