புதுடெல்லி: ஐபிஎல் சீசன் 13 (IPL 13) இன் மூன்றாவது போட்டி செப்டம்பர் 21 ஆம் தேதி அதாவது இன்று துபாயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (SRH vs RCB) அணிக்கு இடையே நடைபெறும். இந்த போட்டியில் அனைவரின் கண்களும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் (David Warner) மீதே குவிந்திருக்கின்றன. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வார்னரின் மட்டை வீச்சு அதிரடியாக இல்லை. ஆனாலும்கூட, டேவிட் வார்னர் ஐபிஎல்லில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். இது அனைவருக்கும் தெரியும். RCB எதிரான வார்னரின் கடைசி 9 போட்டிகளின் புள்ளிவிவரங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.
RCB க்கு எதிரான கடைசி 9 போட்டிகளில் வார்னர் 562 ரன்கள் எடுத்தார்
ஐ.பி.எல்லின் ஒவ்வொரு பருவத்திலும் டேவிட் வார்னர் கடுமையாக விளையாடி, ரன் மழை பொழிவார். எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வார்னரின் பேட்டை அலட்சியமாக நினைத்து விட முடியாது. கடந்த 9 போட்டிகளில், ஆர்.சி.பிக்கு எதிரான டேவிட் வார்னரின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை நினைவில் கொள்வதும் அவசியம். RCBக்கு எதிரான கடைசி 9 போட்டிகளில் டேவிட் வார்னர் 562 ரன்கள் எடுத்துள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆர்.சி.பி அணிக்கு எதிராக வார்னர் பேட்டிங் செய்ய விரும்புகிறார் என்று சொன்னால் போதும். இந்த நேரத்தில் வார்னரின் பேட்டிங் சராசரி 80.29 என்பதையும் கருத்தில் கொள்ளலாம். இதற்கிடையில், ஐபிஎல்-லின் 13ஆம் பதிப்பில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிகளில், டேவிட் வார்னர் தனது அற்புதமான ஆட்ட்த்தைத் தொடர்வார்.
ஐபிஎல் 2019 இல் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியை வென்றார்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிகபட்சமாக 3 முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற வீரர் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது. வார்னர் இந்த சாதனையை 2015, 2017 மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் 2019இல் சாதித்தார். ஐபிஎல் 12 இன் போது டேவிட் வார்னர் ஒரு சிறந்த ஆட்டத்தை ஆடினார், 12 போட்டிகளில், 143.86 என்ற சிறந்த ஸ்ட்ரைக் விகிதத்துடன், 692 ரன்கள் எடுத்தார். இது அனைவரையும் அதிர வைத்தது.. இது ஒரு சதம் மற்றும் 8 அரை சதங்கள் என்ற ரன் குவிப்பினால் வந்தது. அத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல் 2020 இல் டேவிட் வார்னர், எதிரணி வீரர்கள் அனைவருக்கும் அச்சத்தைத் தருபவர் என்பதில் ஐயமில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) வார்னரின் தலைமையில் 2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.