விடைபெற்றார் ஆண்டர்சன்... 40,037 பந்துகளில் 704 விக்கெட்டுகள் - சாதனைகளின் லிஸ்ட் இதோ!

James Anderson Stats In Test Career: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை குறித்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 12, 2024, 08:25 PM IST
  • ஜேம்ஸ் ஆண்டர்சன் மொத்தம் 21 ஆண்டுகள் டெஸ்டில் விளையாடினார்.
  • தற்போது அவரது வயது 41.
  • இதுவரை 704 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
விடைபெற்றார் ஆண்டர்சன்... 40,037 பந்துகளில் 704 விக்கெட்டுகள் - சாதனைகளின் லிஸ்ட் இதோ! title=

James Anderson Stats In Test Career: ஜிம்மி என கிரிக்கெட் உலகில் செல்லமாக அழைக்கப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று அவருடைய கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் 41 வயதான ஆண்டர்சன் சர்வதேச ரீதியிலான அனைத்து வகை போட்டிகளிலும் அவர் ஓய்வு பெற்றார். 

2003ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக தனது முதல் டெஸ்ட் போட்டியை கிரிக்கெட்டின் கோவிலாக கருதப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியிருந்த ஆண்டர்சன், தற்போது 41 வயது இளைஞனாக அதே மைதானத்தில் இன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி, தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றிருக்கிறார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் எந்த வேகப்பந்துவீச்சாளரும் செய்யாத பல சாதனைகளை ஆண்டர்சன் செய்திருக்கிறார், பல மைல்கற்களையும் எட்டியிருக்கிறார். அதிக உடல் உழைப்பை கோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மீடியம் பாஸ்ட் பௌலராக இருந்துக்கொண்டு தனது கை வித்தைகள் அனைத்தையும் இன்று வரை காட்டி எதிரணி பேட்டர்களை திக்குமுக்காட வைத்தவர் ஆண்டர்சன். 

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தினர். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆண்டர்சன், கடைசி வரை தான் ஒரு கட்டுக்கடங்காத குதிரை என்பதை நிரூபித்திருக்கிறார் எனலாம். 

மேலும் படிக்க | இர்பான் பதான், யூசப் பதான் ரெண்டு பேருக்கும் மைதானத்திலேயே வெடித்த சண்டை

இப்படி இவர் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் செய்திருக்கும் முக்கிய சாதனைகள் மற்றும் கடந்த மைல்கல்களை இங்கு நினைவுக்கூர்வது அவசியமாகும். அவற்றை இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.

ஆண்டர்சனின் டெஸ்ட் சாதனைகள்

டெஸ்ட் வாழ்க்கை: மொத்தம் 188 போட்டிகளை விளையாடி 704 விக்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியிருக்கிறார். அவரின் சராசரி 26.45, ஸ்ட்ரைக் ரேட் 56.8, எகானமி 2.79, சிறந்த பந்துவீச்சு 7/42 ஆகும். 

அதிக டெஸ்ட்: அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார் ஆண்டர்சன். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளை விளையாடி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதிக விக்கெட்டுகள்: டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆண்டர்சன்தான். 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 

அதிக 5 விக்கெட்டுகள்: 5 விக்கெட்டுகளை கைப்பற்றினால் கிரிக்கெட்டில் Fifer என குறிப்பிடுவார்கள். இது பேட்டர்களுக்கு அரைசதம், சதம் எந்தளவிற்கு பார்க்கப்படுகிறதோ அதேபோல் பந்துவீச்சாளர்களுக்கு இந்த Fifer பார்க்கப்படும். அந்த வகையில், டெஸ்ட் வரலாற்றில் அதிக Fifer எடுத்தவர்களின் பட்டியில் ஆண்டர்சன் 6ஆவது இடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 32 முறை Fifer எடுத்துள்ளார். முரளிதரன் - 67, சர் ரிச்சர்ட் ஹாட்லி 36,  அஸ்வின் 36, அனில் கும்ப்ளே 35, ரங்கனா ஹெராத் 34 ஆகியோர் அந்த பட்டியலில் முன்னணியில் உள்ளனர். 

அதிக பந்துகள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை வீசிய வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன்தான். மொத்தம் 40 ஆயிரத்து 37 முறை Legal டெலிவரிகளை வீசியுள்ளார். இவருக்கு அடுத்து வேகப்பந்துவீச்சில் பிராட் 33 ஆயிரத்து 698 டெலிவரிகளை வீசியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளர்களை கணக்கில் எடுத்தால் ஆண்டர்சன் 4ஆவது இடத்தை பிடிக்கிறார். முதலிடத்தில் முரளிதரன் 44,039 டெலிவரிகளுடனும், இரண்டாமிடத்தில் 40 ஆயிரத்து 850 டெலிவரிகளுடனும், மூன்றாமிடத்தில் 40 ஆயிரத்து 705 டெலிவரிகளுடனும் உள்ளனர். 

ஆண்டர்சனின் 100ஆவது விக்கெட்: ஜாக்ஸ் காலிஸ்

ஆண்டர்சனின் 200ஆவது விக்கெட்: பீட்டர் சிடில்

ஆண்டர்சனின் 300ஆவது விக்கெட்: பீட்டர் ஃபுல்டன்

ஆண்டர்சனின் 400ஆவது விக்கெட்: மார்டின் குப்தில்

ஆண்டர்சனின் 500ஆவது விக்கெட்: கிரைக் பிராத்வெயிட்

ஆண்டர்சனின் 600ஆவது விக்கெட்: அசார் அலி

ஆண்டர்சனின் 700ஆவது விக்கெட்: குல்தீப் யாதவ்

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியும் இந்தியாவுக்கு தான்... பிசிசிஐ போடும் பக்கா பிளான் - ஸ்கெட்ச் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News