IPL 2024 RCB vs KKR Highlights: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்து. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் பிளெயிங் லெவனில் சில மாற்றங்களை செய்தன.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது. விராட் கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 83 ரன்களை அடித்திருந்தார். தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் 8 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்களை அடித்து 20 ரன்களை சேர்த்தார். கேப்டன் டூ பிளெசி, மேக்ஸ்வெல், ரஜத் பட்டிதார், அனுஜ் ராவத் ஆகியோர் இன்று சோபிக்கத் தவறிவிட்டனர், கேம்ரூன் கிரீன் மட்டுமே சற்று ஆறுதல் அளித்தார்.
பவர்பிளேவில் பவர் காட்டிய கேகேஆர்
கொல்கத்தா அணி பந்துவீச்சில் ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுனில் நரைன் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். ரஸ்ஸலின் மிதவேக பந்துவீச்சு முதல் பாதியில் கொல்கத்தா அணிக்கு நன்றாக பலன் அளித்தது. அவரின் கட்டர் வகை பந்துகள் ஆர்சிபி அணியை ரன் குவிக்க விடாமல் தடுத்தது. அவரின் அதே பாணியை பயன்படுத்தி ஹர்ஷித் ராணா, ஸ்டார்க் ஆகியோரும் ரன்களை கட்டுப்படுத்தினர்.
மேலும் படிக்க | இனி உங்கள் செல்ல நாயுடன் மைதானத்திலேயே ஐபிஎல் போட்டியை பார்க்கலாம்... எங்கு, எப்படி?
ஆர்சிபி பவர்பிளே 61 ரன்களை எடுத்திருந்த நிலையில், 200 ரன்களையாவது தாண்டியிருக்க வேண்டும். ஆனால், சுமார் 30 ரன்கள் குறைவாக அடித்திருந்தது ஆர்சிபி. 183 ரன்கள் என்ற இலக்குடன் பில் சால்ட், சுனில் நரைன் ஜோடி களமிறங்கி முதல் ஓவரில் இருந்தே ஆர்சிபி பௌலர்களை அடித்து நொறுக்கினர். சிராஜ், யாஷ் தயாள், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் பவர்பிளேவில் மாறி மாறி வீசியும் ஆர்சிபிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த ஜோடி 6 ஓவர்களில் 85 ரன்களை சேர்த்தது.
The streak is broken! @KKRidersbecome the first team to register an away win in #TATAIPL 2024
Scorecardhttps://t.co/CJLmcs7aNa#RCBvKKR pic.twitter.com/svxvtA409s
— IndianPremierLeague (@IPL) March 29, 2024
சுனில் நரைன் அரைசதம்
பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரே சுனில் நரைன் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடக்கம். மறுபுறம் அதிரடி காட்டிய பில் சால்டும் வைஷக் விஜயகுமார் பந்துவீச்சில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை அடித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி ஆட்டத்தை ஆர்சிபியிடம் இருந்து மொத்தமாக பறித்தது.
ஆர்சிபி படுதோல்வி
வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உடன் 50 ரன்களை அடித்து ஆட்டமிழந்தாலும், 17ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து கொல்கத்தா அணிக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியை பதிவு செய்தார். 19 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சுனில் நரைன் வென்றார். இதுவரை நடந்த 9 ஆட்டங்களிலும் ஹோம் அணிகள் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் முதல்முறையாக ஹோம் அணியான ஆர்சிபி தோல்வியடைந்துள்ளது.
மேலும் படிக்க | மலிங்கா அப்செட்! சீனியர் பிளேயர்களை அசிங்கப்படுத்துவதே பாண்டியாவுக்கு வேலையா போச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ