துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2020 தொடரில் லசித் மலிங்காவுக்கு மாற்றாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சனை (James Pattinson) மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. "தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைபாட்டின்" காரணமாக மலிங்கா அணியில் இருந்து விலகியுள்ளார் என்று புதன்கிழமை (செப்டம்பர் 2) மும்பை இந்தியன்ஸ் உரிமையை அறிவித்தார்.
"லசித் மாலிங்கவுக்கு பதிலாக ஜேம்ஸ் பாட்டின்சன் எங்களுக்கு சரியான பொருத்தமாகவும் மற்றும் இந்த சீசனில் எங்கள் அணிக்கு வேக பந்துவீச்சு தாக்குதலுக்கு சரியான வீரராக இருப்பார்" என்று எம்ஐ (Mumbai Indians) உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்,.
ALSO RED | IPL 2020-லில் இருந்து வெளியேறியது ஏன்? மௌனம் களைத்த SURESH RAINA
"லசித் மாலிங்க (Lasith Malinga) ஒரு சிறந்தக் வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலிமையின் தூண். இந்த சீசனில் லசித்தின் கிரிக்கெட் ஒத்துழைப்பை நாங்கள் இழப்போம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. இருப்பினும், இந்த நேரத்தில் லசித் தனது குடும்பத்தினருடன் இலங்கையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம்." எனவும் கூறினார்.
கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி (IPL Champion 2019) பட்டம் வெல்ல லசித் மாலிங்க முக்கிய காரணமாக் இருந்தார். நான்காவது முறையாக IPL சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் வென்றது. அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து இறுதி கட்டத்தில் வெற்றியை தேடி தந்தார்.
122 போட்டிகளில், அவர் 170 விக்கெட்டுகளை கைபற்றி உள்ளார். அவரின் சராசரியாக 19.80 மற்றும் எகானமிக் விகிதம் 7.14.
ALSO RED | IPL history: தனித்துவமான வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்
அதே சமயம் ஜேம்ஸ் பாட்டின்சன் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடியதில்லை. இந்த வார இறுதியில் பாட்டின்சன் அபுதாபியில் இருக்கும் மும்பை அணியுடன் இணைய உள்ளார்.
IPL போட்டியின் 13 வது சீசன் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும். இருப்பினும், ஐபிஎல் போட்டிக்கான (ipl schedule) அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.