Mumbai Indians vs Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ஐபிஎல் ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் 2024ன் 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வான்கடே மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியின் போது கெய்க்வாட் இந்த புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த போட்டியில் 48 ரன்கள் அடித்து இருந்த போது இந்த 2,000 ஐபிஎல் ரன் சாதனையை படைத்துள்ளார். 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 57 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளார். இந்த 2000 ரன்கள் மைல்கல்லை அடைய கேஎல் ராகுலுக்கு 60 இன்னிங்ஸ் தேவைப்பட்டது.
மேலும் படிக்க | Thala For A Reason: ஐபிஎல் போட்டிகளில் தோனியின் சிறந்த 7 மைல்கல்!
மேலும், கெய்க்வாட் ஐபிஎல்லில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தாலும், இந்த மைல்கல்லை எட்டிய அதிவேக வீரர்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தில் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் போன்றவர்கள் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளனர். கிறிஸ் கெய்ல் 48 இன்னிங்சிலும், ஷான் மார்ஷ் 52 இன்னிங்சிலும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 29வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஓபன் செய்தனர். ஆனால் 2வது ஓவரிலேயே அஜிங்க்யா ரஹானே அவுட் ஆகி வெளியேறினார். ஆனாலும் கேப்டன் கெய்க்வாட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பவர்பிளே முடிவில், சிஎஸ்கே 48/1 என்று நல்ல ஸ்கோரில் இருந்தது. ஷ்ரேயாஸ் கோபால் ஓவரில் ரச்சின் ரவீந்திரா அவுட் ஆக, பின்பு ஜோடி சேர்ந்த துபே மற்றும் கெய்க்வாட் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். துபே வழக்கம் போல தனது அதிரடியை காட்டினார். 28 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார் ஷிவம் துபே பூர்த்தி செய்தார். கெய்க்வாட் 40 பந்துகளில் 68 ரன்கள் அடித்து இருந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது.
அடிக்கக்கூடிய இலக்கை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் மற்றும் இஷான் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் பவர்பிளேயில் 10.50 என்ற விகிதத்தில் சிறப்பாக ஆடினர். நாலாபுரமும் பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்தனர். 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 63/0 என வலுவான நிலையில் இருந்தது. பின்பு வந்த பத்திரனா ஒரே ஓவரில் வெற்றியை சென்னை பக்கம் திருப்பினார். இஷான் மற்றும் சூர்யகுமார் யாதவை ஒரே ஓவரில் அவுட் செய்தார். பின்பு களமிறங்கிய மும்பை அணியின் பேட்டர்கள் ரன்கள் அடிக்க தவறினர். ரோஹித் சர்மா தனி ஆளாக சதம் அடித்தாலும், 20 ஓவர் முடிவில் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ