வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால், அந்த அணியின் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
30 வயதான தொடக்க ஆட்டக்காரர் வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரஃப் மோர்டாசாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்றுள்ளார். மஷ்ர்ப் மோர்டாசா ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் பின்னர் பதவியில் இருந்து விலகினார், இந்நிலையில் தற்போது தமீம் இக்பால் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
இக்பால் நியமனம் குறித்த செய்தியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) தலைவர் நஸ்முல் ஹசன் ஞாயிற்றுக்கிழமை வாரியக் கூட்டத்தைத் தொடர்ந்து அறிவித்துள்ளார்.
The Bangladesh Cricket Board (BCB) today announced opening batsman @TamimOfficial28 as the Bangladesh ODI Captain. The decision was made at the 8th meeting of the BCB Board of Directors.https://t.co/3uCm0DvRN3
— Bangladesh Cricket (@BCBtigers) March 8, 2020
இந்த செய்தியை அறிவித்த ஹசன், மோர்டாசா அணியை வழிநடத்தாமல் ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷின் சாதனை சாத்தியமில்லை என்று கூறினார், இருப்பினும், வேறு யாராவது அணியின் கேப்டன் ஆக வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "மஸ்ராஃப் பின் மோர்டாசா சமீபத்தில் ஒரு அருமையான பதவிக்காலத்திற்குப் பிறகு ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் அணியை வழிநடத்தாமல் ஒருநாள் வடிவத்தில் சாதனைகள் சாத்தியமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது" எனதெரிவித்துள்ளார்.
"நாங்கள் அணியை நீண்ட காலத்திற்கு வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கும் தமீமை கேப்டனாக தேர்வு செய்துள்ளோம்," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், ஜூலை 2019-ல் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது தமீம் கடைசியாக வங்கதேச ஒருநாள் அணியை வழிநடத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது தொடக்க ஆட்டக்காரர் மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார்.