டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது தொலைக்காட்சி மற்றும் வானொலியில் டென்னிஸ் விளையாட்டுகளை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளராகப் பணிபுரியும் நவ்ரதிலோவா, தனது உடல்நிலை காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்காக மெல்போர்னுக்குச் செல்ல மாட்டார். ஆனால் தொலைதூரத்தில் இருந்து நடைபெறும் ஒளிபரப்புகளில் பங்களிப்பார் என்று கூறப்படுகிறது.
பெண் விளையாட்டு வீராங்கனைகள் என்ற பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ள டென்னிஸின் பிரபலமான வீராங்கனை, 18 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை பதிவு செய்தவர். மார்டினா நவ்ரதிலோவாவுக்கு, தொண்டை மற்றும் மார்பக புற்றுநோய் என இடங்களில் ஒரே நேரத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, டென்னிஸ் ஜாம்பவான்களுகு மட்டுமல்ல, விளையாட்டு ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பிபிசி செய்தி நிறுவனத்திற்கு மார்ட்டினா அளித்த பேட்டியில், இரண்டு புற்றுநோய்களும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதாக கூறினார் நவ்ரதிலோவா.
"வலி தீவிரமானது என்றாலும், எனது நோய் சரிசெய்யக்கூடியது என்று நம்புகிறேன். நான் இந்த நோயையும் எதிர்த்து போராட்டி வெற்றி பெறுவேன்" என்று கூறிய அவர், மருத்துவ சிகிச்சைக்காக நியூயார்க் செல்லவுள்ளார்.
மேலும் படிக்க | இந்தியா vs இலங்கை டி20 போட்டி: நல்ல வாய்ப்பு.. ஜொலிப்பார்களா இந்த வீரர்கள்?
இதையடுத்து, நவ்ரதிலோவா விரைவில் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனைகளும் உலகம் முழுவதும் தொடங்கிவிட்டன. மார்டினா நவ்ரதிலோவாவின் உதவியாளர் நோய் மற்றும் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து பேசிய அவரது உதவியாளர், "மார்ட்டினா நவ்ரதிலோவாவுக்கு தொண்டை புற்றுநோயின் நிலை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, முன்கணிப்பு நன்றாக உள்ளது, மார்டினா இந்த மாதம் தனது சிகிச்சையைத் தொடங்குவார்" என்று தெரிவித்தார்.
"புற்றுநோய் வகை HPV மற்றும் இந்த குறிப்பிட்ட வகை சிகிச்சைக்கு மிகவும் நன்றாக பதிலளிக்கிறது. ஃபோர்ட் வொர்த்தில் WTA இறுதிப் போட்டியின் போது மார்டினா தனது கழுத்தில் ஒரு விரிவாக்கப்பட்ட நிணநீர் முனையை கவனித்தார். அது குறையவில்லை, ஒரு பயாப்ஸி செய்யப்பட்டது, அதன் முடிவுகள் மீண்டும் வந்தன. மார்ட்டினா தொண்டைக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட அதே நேரத்தில், அவரது மார்பகத்தில் சந்தேகத்திற்கிடமான வடிவம் கண்டறியப்பட்டது, இது தொண்டை புற்றுநோயுடன் முற்றிலும் தொடர்பில்லாத புற்றுநோயாக கண்டறியப்பட்டது. இருப்பினும், நல்ல செய்தி என்னவென்றால், இரண்டு புற்றுநோய்களும் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதால், சிகிச்சை விரைவில் பலனளிக்கும்” என்று மார்டினா நவ்ரதிலோவாவின் உதவியாளர் தெரிவித்தார்.
"இந்த இரண்டு புற்றுநோய்களும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்காக, ஜூம் மூலம் அவ்வப்போது ரசிகர்களை மார்டினா சந்திப்பார் என்று நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
31 முறைகள் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள மார்ட்டினா, 10 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார். டென்னிஸ் போட்டிகளில், அதிக முறை ஆண் மற்றும் பெண் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகலில் வெற்றி பெற்ற தனி நபர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும் படிக்க: இனி இந்திய வீரர்களுக்கு இது ரொம்ப முக்கியம் - பிசிசிஐ புதிய திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ