ஆசிய விளையாட்டு போட்டிகளில், மகளிர் ஹேப்டேத்லான் பிரிவில் தங்கம் வென்றார் ஸ்வப்னா பார்மென்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 11-வது நாளான இன்று இந்தியாவின் ஸ்வப்னா பார்மென் மகளிர் ஹேப்டேத்லான் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
#AsianGames2018: India's Swapna Barman wins gold in Women's Heptathlon event pic.twitter.com/HvH1fNCOtP
— ANI (@ANI) August 29, 2018
இன்றைய தினத்தில் இந்தியவிற்கு கிடைத்த இரண்டாவது தங்கம் இதுவாகும். முன்னாதாக இந்தியாவின் அர்பிந்தர் சிங், மும்முறை தாண்டல் பிரிவில் தங்கம் வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீர்ர ராக்கேஷ் பாபு 16.38 அளவினை மட்டும் கடந்து பதக்கப்பட்டியிலில் இடம்பெறாமல் ஏமாற்றினார்.
ஸ்வப்னா வென்ற தங்கம் இந்தியாவிற்கான 11-வது தங்கம் ஆகும். இந்நிலையில் தற்போது இந்தியா 11 தங்கம், 20 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
101 தங்கம் உள்பட 217 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 51 தங்கம் உள்பட 161 பதக்கக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடத்திலும் உள்ளது.