துபாய்: இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 சர்வதேச பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் அரைசதம் அடித்த போதிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே நேரத்தில் சக வீரர் கேஎல் ராகுல் 2 இடங்கள் இழந்து எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தாலும், கோஹ்லி (ரேட்டிங் புள்ளிகள்-725 ) 49 பந்துகளில் அரைசதம் அடித்தார், ராகுல் (ரேட்டிங் புள்ளிகள்-684) வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
டி20 பேட்டிங் தரவரிசை:
டி20 பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 820 புள்ளிகளுடன் உள்ளார். பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மூன்று இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது கிரிக்கெட் பயணித்தின் சிறந்த தரவரிசையாகும். ரிஸ்வான் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 33 ரன்களும் எடுத்து தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 40 மற்றும் 51 ரன்களை எடுத்து பட்டியலில் சிறந்த இடத்தை அடைந்தார். அவர் எட்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதற்கு முன் ஐடன் மார்க்ராம் ஒன்பதாவது இடத்தில் இருந்தார்.
ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஸ்காட்லாந்துக்கு எதிராக 46 ரன்களை குவித்து 9 இடங்கள் முன்னேறி 12வது இடத்தில் உள்ளார். வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயீம் இலங்கைக்கு எதிராக 52 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து 11 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்தார்.
ALSO READ | ஹர்பஜன் - முகமது அமீருக்கு இடையே கடுமையான கருத்து மோதல்; வைரலாகும் ட்வீட்
டி20 பவுலிங் தரவரிசை:
T20 பந்துவீச்சு தரவரிசை பட்டியில் சவுத் ஆப்ரிக்கா அணியின் வீரர் தப்ரேஸ் ஷம்சி (Tabraiz Shamsi) 750 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதல் ஒன்பது இடங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி, 31 ரன்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 11 இடங்கள் முன்னேறி 12வது இடத்திற்கு முன்னேறினார்.
டி20 ஆல்-ரவுண்டர் தரவரிசை:
ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் வங்கதேச நட்சத்திரம் ஷாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan ) முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த பட்டியலிலும் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR