ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17 முதல் தொடங்கி, வரும் நவ. 14ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 

Written by - RK Spark | Last Updated : Oct 17, 2021, 03:15 PM IST
ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன? title=

ICC T20 World Cup: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17 முதல் தொடங்கி, வரும் நவ. 14ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை  தொடரில்  ஆலோசகராக  இந்திய அணி  முன்னாள் கேப்டனான தோனி  இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது .

கடந்த 2007ம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி.  

ALSO READ வருகிறார் குட்டி தல: இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து தோனி - சாக்ஷி!

இந்நிலையில் டோனி ஆலோசகராக  நியமித்தது  குறித்து விராட் கோலி கூறியதாவது, இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ்.தோனி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் இந்திய அணியில் இணைவது குறித்து தோனி மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்றுமே எங்களுக்கு ஆலோசகராக தான் இருந்துக்கொண்டு வருகிறார்.  அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர், அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும்.  தற்போது மிகப்பெரும் தொடர்களை அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் எதிர்கொள்வதனால் மீண்டும் அந்த பணியை செய்ய தோனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

virat

இத்தனை வருடங்களாக தோனி கற்றுக்கொண்ட அனுபவங்களை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். ஆட்டத்தின் நுணுக்கங்கள், ஆட்டம் எப்படி சென்றுக் கொண்டிருக்கிறது, சிறிய விஷயம் மூலம் அதனை எப்படி நமது பக்கம் கொண்டு வரலாம் என்பதற்கெல்லாம் தோனியின் அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவும். தோனி மீண்டும் இந்திய அணிக்குள் வருவது புத்துணர்ச்சியாகவும், தூண்டுக்கோலாகவும் இருக்கும் என்று கூறினார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின் , ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

காத்திருப்பு வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்ஸர் படேல்

ALSO READ உலக கோப்பை அணியில் இடம் பிடித்த சர்துல் தாக்கூர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News