RCB ரசிகர்களே! என்னை மன்னியுங்கள்கள் -விராட் கோலி!

IPL-லில் சிறப்பாக விளையாட முடியாமல் போனதற்கு RCB ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு விராட் கோலி ட்விட்...! 

Last Updated : May 25, 2018, 10:40 AM IST
RCB ரசிகர்களே! என்னை மன்னியுங்கள்கள் -விராட் கோலி!  title=

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாமல் வெளியேறியதற்காக விராட் கோலி தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலே போட்டியில் இருந்து வெளியேறியது. 14 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தது.

வலுவற்ற பந்துவீச்சு, நிலைத்தன்மை இல்லாத பேட்டிங் ஆகியவை இந்த முறை ஆர்சிபி அணியின் மோசமான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. அணியின் தோல்விக்குப் பின் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் கேப்டன் விராட் கோலி இருந்து வந்தார்.

இந்நிலையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி விராட் கோலி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது....! 

எங்களால் நினைத்த அளவுக்கு 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனையை ஏற்படுத்தியது மட்டுமின்றி காயப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி தான். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்து விடாது. அடுத்த சீசனில் நாம் எப்படி விளையாட வேண்டும், தயாராக வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அடுத்த சீசனில் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, ஐபிஎல் சீசனில் இன்னும் கூடுதல் முயற்சிகளோடு, அதிகமான பலத்தோடு நாங்கள் களமிறங்கி விளையாடுவோம் என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களைச் சேர்த்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 14 போட்டிகளில் 548 ரன்கள் சேர்த்து 6-வது இடத்தில் உள்ளார். இவரின் சராசரி 54.80. ஏபி டிவில்லியர்ஸ் 480 ரன்கள் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது! 

 

Trending News