Roger Federer பிரெஞ்சு ஓபன் 2021 இலிருந்து விலகிய காரணம் என்ன?

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார் ரோஜர் ஃபெடரர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. நேற்று ஜெர்மனியின் டொமினிக் கோய்பெரை 7-6 (7-5), 6-7 (3-7), 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஃபெடரர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2021, 08:39 PM IST
  • Roger Federer பிரெஞ்சு ஓபன் 2021 இலிருந்து விலகிய காரணம் என்ன?
  • நேற்று ஜெர்மனியின் டொமினிக் கோய்பெரை வீழ்த்தினார் ஃபெடரர்
  • 20 முறை கிராண்ட்ஸ்லாம் பெற்ற சாம்பியன் ரோஜர் பெடரர்
Roger Federer பிரெஞ்சு ஓபன் 2021 இலிருந்து விலகிய காரணம் என்ன? title=

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார் ரோஜர் ஃபெடரர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. நேற்று ஜெர்மனியின் டொமினிக் கோய்பெரை 7-6 (7-5), 6-7 (3-7), 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஃபெடரர். 

"எனது அணியுடனான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, நான் இன்று பிரெஞ்சு ஓபன் டென்ன்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன்" என்று 39 வயதான ஃபெடரர் தெரிவித்தார்.

2020 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு தனது முதல் ஸ்லாம் போட்டியில் பெடரர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  "இரண்டு முழங்கால் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒரு வருட பயிற்சிக்கு பிறகு, என்னுடைய உடல் தகுதி மீண்டிருக்கிறது. இந்த நிலையில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுவது அவசியம்" என்று ஃபெடரர் தெரிவித்தார்.

Also Read | புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட்டர்கள் மறுப்பது ஏன்?

20 முறை கிராண்ட்ஸ்லாம் பெற்ற சாம்பியன் ரோஜர் பெடரர் நேற்றைய போட்டியில் மூன்று மணி, 35 நிமிடங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்றார். அவர் இறுதி 16இல், தர வரிசையில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் மேட்டியோ பெரெட்டினி (Matteo Berrettini)ஐ எதிர்கொள்ளவிருந்தார்.

"நான் விளையாடப் போகிறேனா என்று எனக்குத் தெரியவில்லை," ஃபெடரர் சனிக்கிழமை இரவு வெற்றியின் பின்னர் கூறியிருந்தார். "தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பதை நான் தீர்மானிக்க வேண்டும். முழங்காலில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மிகவும் ஆபத்தானதா? ஓய்வெடுக்க இது நல்ல நேரமா? என்பதை ஆலோசிக்கவேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக,  அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் விம்பிள்டன் போட்டிகளில் கவனம் செலுத்துவதாக ஃபெடரர் கூறியிருந்தார். விம்பிள்டனில் (Wimbledon) எட்டு ஆண்கள் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார் ரோஜர் ஃபெடரர்.

Also Read | Pakistan கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுக்கும் விதம் புரியவில்லை என சாடுகிறார் Ramiz Raja

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News