சென்னையில் இன்று ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா தொற்று; மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 20,99 ஆக உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,76, 695 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் 16,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
READ | கொரோனா காலத்தில் உடலுறவு கொள்ளும் போது முகமூடி அணிய பரிந்துரை..!
மருத்துவமனைகளில் 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,423 ஆகும். மற்ற நாடுகள், மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து வந்த 5 பேருக்கும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கும் கர்நாடகாவிலிருந்து வந்த 3 பேருக்கும் டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கும் அந்தமான் நிகோபாரிலிருந்து வந்த ஒருவருக்கும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பரவியது.
District
|
Cnfrmd
|
Actv
|
Rcvrd
|
Dcsd
|
|
↑1,14620,955 | 10,185 | ↑36210,572 | ↑19198 |
|
↑951,718 | 941 | ↑74763 | 14 |
|
↑801,268 | 589 | ↑21668 | 11 |
|
↑16496 | 184 | ↑15309 | 3 |
|
↑3486 | 306 | ↑14178 | 2 |
|
↑1476 | 36 | ↑4439 | 1 |
|
↑2385 | 56 | ↑5328 | 1 |
|
↑5379 | 19 | ↑1360 | 0 |
|
↑6369 | 44 | 323 | 2 |
|
↑14326 | 148 | ↑8176 | 2 |
|
↑7299 | 67 | ↑33229 | 3 |
|
↑23280 | 224 | ↑356 | 0 |
|
↑3267 | 114 | 153 | 0 |
|
↑3219 | 127 | ↑2492 | 0 |
|
↑12167 | 98 | ↑1168 | 1 |
|
↑3156 | 10 | ↑1145 | 1 |
|
↑5156 | 30 | 124 | 2 |
|
↑4147 | 32 | ↑17115 | 0 |
|
143 | 4 | 139 | 0 |
|
↑2124 | 30 | ↑294 | 0 |
|
121 | 14 | ↑6105 | 2 |
|
114 | 0 | 114 | 0 |
|
112 | 26 | ↑985 | 1 |
|
↑2106 | 21 | 85 | 0 |
|
↑4101 | 42 | 58 | 1 |
|
↑2100 | 15 | ↑885 | 0 |
|
↑689 | 11 | 78 | 0 |
|
↑1087 | 32 | ↑654 | 1 |
|
85 | 7 | 77 | 1 |
|
↑681 | 30 | 51 | 0 |
|
72 | 1 | 70 | 1 |
|
↑459 | 17 | ↑442 | 0 |
|
↑257 | 17 | 38 | 2 |
|
↑837 | 16 | 21 | 0 |
|
↑237 | 7 | 30 | 0 |
|
37 | 8 | 29 | 0 |
|
↑135 | 14 | ↑220 | 1 |
|
14 | 0 | 14 | 0 |
|
↑112 | 4 | ↑38 | 0 |
|
0 | -3 | 0 | 3 |
அது போல் சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த 12 பேருக்கும் கேரளாவிலிருந்து வந்த 3 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த ஒருவருக்கும், பீகாரிலிருந்து வந்த ஒருவருக்கும், புதுவையிலிருந்து வந்த ஒருவருக்கும் ஆந்திராவிலிருந்து வந்த இருவருக்கும் டெல்லியிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் 11,446 பேர் ஆண்கள். 9,469 பேர் பெண்கள். 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 12 வயதுவரை உள்ளவர்களில், 1,638 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 25, 385 பேரும், பிறமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 1423 பேரும் உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்களில் 35 பேரும் அடங்குவர்.