சென்னை மண்ணடியில் உள்ள கட்டடத்தில் இருந்து பழங்கால கோவில் சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிலை கடத்தல் தடுப்பு சிஐடி டி.ஜி.பி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் காவல் கண்காணிப்பாளர் ரவி தலைமையில் தேடுதல் பணிக்கு மற்றும் காவல்துறை அதிகாரிகள் குழு பமீலா இமானுவேல் என்பவருக்குக்கு சொந்தமான இடத்தை சோதனையிட்டனர். பமீலா இமானுவேலின் கணவர் மறைந்த மானுவல் ஆர் பினிரோ சிலை கடத்தல்காரர் என்று கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவர் மறைவுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குக் கடத்த முடியாத சில சிலைகள் அந்த விட்டில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற மனு தாக்கல்
தேடுதல் தொடங்கிய போது குழுவினர் முதலில் தட்சிணாமூர்த்தி சிலையை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த குழுவினர் நன்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் தேடியபோது, மேலும் 8 சிலைகள் கைப்பற்றப்பட்டது. முதலில், சுமார் 20 செ.மீ அகலமும் தோராயமாக 67 செ.மீ உயரமும் கொண்ட பெண் தெய்வத்தின் சிலையை கண்டுபிடித்தனர். சிலைகளை மறைத்து வைத்திருந்த விட்டில் உள்ளவர்களிடம், சிலைகளை வைத்திருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. கோவில் வளாகத்தில் சிலைகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிலைகளின் அடிப்பகுதியில் நீட்டிப்பு இருந்ததால் சாட்சிகள் முன்னிலையில் குழுவினர் சிலைகளை கைப்பற்றினர்.
எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டது என்பது தெரியவில்லை. சிலைகள் கைப்பற்றப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட மானுவல் குடும்பத்தினரிடம் சிலைகளின் உரிமை அல்லது தோற்றம் குறித்த சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை. முறையான ஆவணங்கள் ஏதுமின்றி பழங்கால சிலைகளை தங்களிடம் வைத்திருப்பதற்கு அவர்களிடம் முறையான விளக்கமும் இல்லை. அதை எப்படி பெற்றனர் என்பதை விளக்கவும் முடியவில்லை. எனவே ஆய்வாளர்வசந்தியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள் சிலையை திருடிய குற்றவாளிகள் மற்றும் அவற்றின் தொன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் படிக்க | விஞ்ஞான ஊழலெல்லாம் திமுகவுக்கு கை வந்த கலை - ஜெயக்குமார் விமர்சனம்
சிலைகளை ஆய்வு செய்த வல்லுநர் ஸ்ரீதரன் ஒன்பது சிலைகளில் ஏழு சிலைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையானவை என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழுவிடம் தெரிவித்துள்ளார். மீதமுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் கண்டுபிடித்த பின்னரே கைப்பற்றப்பட்ட சிலையின் உண்மையான ஆதாரம் தொடர்பான விவரங்களைப் பெற முடியும். மேலும், கைப்பற்றப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள சிலைகளாகும். காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்புக் குழுவை வெகுவாகப் பாராட்டியதுடன், சிறந்த பணிக்காக குழுவிற்கு வெகுமதியையும் அறிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ