இனியும் மெத்தனம் வேண்டாம்.. எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் திருமாவளவன்..

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டுமென்பதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Mar 11, 2022, 12:44 PM IST
  • பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரள வேண்டும்
  • 5 மாநில தேர்தல் குறித்து திருமாவளவன் விமர்சனம்
  • பாஜகவை மெத்தனமாக எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகள்
இனியும் மெத்தனம் வேண்டாம்.. எதிர்க்கட்சிகளை எச்சரிக்கும் திருமாவளவன்.. title=

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பஞ்சாப் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்கு பாஜகவின் பாசிச பெருந்தீங்கு அரசியலை இன்னும் புரிந்துகொள்ளாத எதிர்க் கட்சிகளின் மெத்தனப்போக்கே காரணமென கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக சராசரி அரசியல் கட்சியல்ல - பிற்போக்குத்தனமான பாசிச, சனாதன பயங்கரவாத சங்பரிவாரின் அரசியல் பிரிவு என்பதை எதிர்க்கட்சிகள் யாவும் உணர்ந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் எனவும், அதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு மாற்று சக்தியாக அணிதிரள வேண்டும் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன எனவும் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியே ஆகும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ‘பாடம் கற்போம், தொடர்ந்து பாடுபடுவோம்’ - காங்கிரஸ்

 

கோவாவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சரிந்ததே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமென காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
2024 நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவும், குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலத்தை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் கருதப்பட்ட இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளின் வாக்குகளைக் கொண்டே குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், தற்போது 15 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளதால், அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளரே குடியரசுத்தலைவராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் 5 மாநில தேர்தல் முடிவுகள்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் ட்விட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News