கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் கடை ஒன்றியில் பொருத்தப்பட்ட ஏ சி வெளிப்புற பாக்சின் காப்பர் பைப்புகள் திருடு போனதாக தெரிய வந்தது. இந்த நிலையில் கடையின் உரிமையாளர் ஆர்.எஸ்.புரம் போலிஸாரிடம் திருட்டு சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
பின்னர் புகாரின் அடிப்படையில் போலிஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியின் அடிப்படையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல தோற்றத்தை கொண்டுள்ளார் என தெரியவந்தது.
இதையடுத்து வலைவீசி தேடிய போலீஸார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த காளியப்பன் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் காளியப்பன் இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை சேகரித்து விற்று பிழைப்பை நடத்துபவர் என்று தெரியவந்தது. மேலும் இவர் பார்க்க மன நலம் குன்றிய நபரை போலவும், பிச்சைக்காரர் போலவும் தோற்றமளித்துள்ளார்.
வழக்கமாக இவர் கையில் சாக்கு பை ஒன்றை வைத்துக்கொண்டு பொருட்களை சேகரித்து வந்துள்ளார். இதற்கிடையில், யாரும் இல்லாத இடத்தில் இருக்கின்ற உலோக பொருட்களை திருடி சென்று காயலாங்கடையில் விற்று பணம் ஈட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும், இதேபோல் ஆர்.எஸ்.புரம் கடை ஒன்றிலும் அவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார் என்பது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியதால் தெரியவந்தது.
இதற்கிடையில், காளியப்பன் மீது காட்டூர், ரத்தனபுரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதியப்பட்டு அவர் சிறைக்கு சென்று தண்டனையும் அனுபவித்துள்ளார் எனவும் தெரிய வந்தது.
சிறை தண்டனைக்குப்பின் வெளியே வந்த இவர் மீண்டும் பிளாஸ்டிக், உலோகம் பொறுக்குவதை போல சாக்கை எடுத்துக்கொண்டு பொருட்களை களவாடி வந்திருக்கின்றார்.
காளியப்பனை பிடித்த நிலையில் அவரது தோற்றத்தை கண்டு இறக்கப்பட்ட ஆர்.எஸ்.புரம் போலீஸார் சலூன் கடைக்காரரை வரவழைத்து காளியப்பனுக்கு முடி திருத்தம் செய்தனர். பின்னர் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR