ரஜினிகாந்தின் நம்பிக்கைக்குரிய தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகினார்

அரசியல் என்பது சாதி, மதம் மற்றும் சமூக போன்ற பெயரில் சுய ஆதாயம் தேடும் வீடாக மாறிவிட்டது. இதனை மாற்றி மக்களுக்கான களமாக அரசியல் மாற்ற வேண்டும் என எனது முயற்சிக்காக மக்கள் இப்போது என்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 30, 2020, 06:27 PM IST
  • எனது கல்லூரி நாட்களில் கே காமராஜ் பாதை அரசியலில் நான் ஈடுபட்டேன்.
  • இன்னும் ஒரு வாடகை வீட்டில் தான் தொடர்ந்து வசித்து வருகிறேன்.
  • அரசியல் என்பது சாதி, மதம் மற்றும் சமூக போன்ற பெயரில் சுய ஆதாயம் தேடும் வீடாக மாறிவிட்டது.
  • தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்க போவதில்லை: ரஜினிகாந்த்.
  • ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருந்தார்.
ரஜினிகாந்தின் நம்பிக்கைக்குரிய தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகினார் title=

Tamilaruvi Manian Quits Politics: தேர்தல் அரசியல் வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) கூறிய மறுநாளே, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கையாகவும் இருந்த காந்திய மக்கள் இயக்கத்தின் (Gandhiya Makkal Iyakkam) தலைவர் தமிழருவி மணியன், தனது அறிக்கையில், அரசியலில் இருந்து விலகுவதாகவும், இனி அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) தனது அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனது அறிக்கையில், "எனது கல்லூரி நாட்களில் கே காமராஜ் பாதை அரசியலில் நான் ஈடுபட்டேன். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் நடத்தும் அரசியல் முறையை மாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளால் நீண்ட காலமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. நான் ஒருபோதும் எனக்காக தனிப்பட்ட லாபத்தை எதிர்பார்த்து செயல்பட்டது இல்லை. இன்னும் ஒரு வாடகை வீட்டில் தான் தொடர்ந்து வசித்து வருகிறேன் என்று மணியன் (Tamilaruvi Manian) கூறியுள்ளார்.

ALSO READ | Rajnikanth: அபூர்வ ராகங்களாய் மலர்ந்த ’அண்ணாத்த’யின் அரசியல் மூன்றுமுகம்

அரசியல் என்பது சாதி, மதம் மற்றும் சமூக போன்ற பெயரில் சுய ஆதாயம் தேடும் வீடாக மாறிவிட்டது. இதனை மாற்றி மக்களுக்கான களமாக அரசியல் மாற்ற வேண்டும் என எனது முயற்சிக்காக மக்கள் இப்போது என்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர். இங்கு நேர்மையானவர்களுக்கு மதிப்பு இல்லை. என் மீது தரம் தாழ்ந்த விமர்சனம் வீசப்படுவது, எனக்கும், என் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது எனக்கூறியுள்ள அவர், "காந்திய மக்கள் இயக்கத்தில் தன்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Tamilaruvi Manian quits politics

வரும் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்த நடிகர் ரஜினி (Rajinikanth), தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்தாலும், அவரின் உடல்நலம் தான் முக்கியம் என பலர் கருத்து தெரிவித்தனர்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் "அண்ணாத்த" (Annaatthe) படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிக்கு உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி சிகிச்சைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதை அடுத்து, மருத்துவமனையிலிருந்து 27 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பிறகு, சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனைபடி ஓய்வில் இருக்கிறார்.

ALSO READ | கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்! - ரஜினி யுடர்ன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News