Vijay | தவெக முதல் மாநாடு! 38 மாவட்டங்கள்.. பக்கா மாஸ்டர் பிளான் போடும் விஜய்!

Vijay Latest News: நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தில் முக்கிய இடம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இருக்க வேண்டும் என மாஸ்டர் பிளான்

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 1, 2024, 02:02 PM IST
Vijay | தவெக முதல் மாநாடு! 38 மாவட்டங்கள்.. பக்கா மாஸ்டர் பிளான் போடும் விஜய்! title=

Tamilaga Vetri Kazhagam First Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதற்கான வியூகத்தையும் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதாவது தவெக மாநாட்டிற்காக வரும் அனைவருக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கவும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் எவ்வாறு செயல்படுவது என கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார். அதுக்குறித்து பார்க்கலாம். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் நடிகர் விஜய் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. 

மறுபுறம் விழுப்புரம் விக்ரபாண்டியை அடுத்துள்ள வி. சாலையில் அக்டோபர் மூன்றாம் தேதி மாநாட்டுப் பந்தலுக்கான பூமி பூஜை நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்நிலையில், மாநாட்டிற்காக வீட்டில் இருந்து புறப்படும் ஒவ்வொரு தொண்டனும் மாநாடு முடிந்து வீடு திரும்பும் வரை சந்திக்கும் சவால்களை சமாளிப்பது குறித்து நடிகர் விஜய் வியூகம் வகுத்துக் கொடுத்திருக்கிறார். 

மாநாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களின் பதிவு எண், இன்சூரன்ஸ் மற்றும் ஆர்சி புத்தகத்தை முன்கூட்டியே கட்சித் தலைமைக்கு அனுப்ப விஜய் கட்டளையிட்டிருக்கிறார். 

இதுவரை நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஆவணங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தொண்டர்களின் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ள தனியாக ஒரு வழக்கறிஞர் பிரிவையும் விஜய் உருவாக்கி உள்ளாராம்.

தவெக மாநாட்டிற்கு தொண்டர்கள் வரும் போது, அவர்களின் வாகனங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதை சரிசெய்ய தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்களாம். 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு என்பதால், விஜய்யின் பலத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், விக்ரபாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட என திட்டம் போட்டு உள்ளனர். 

இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் குறைந்தது 6000 முதல் 10000 பேரை அழைத்து வரவேண்டும் என கட்டளை விடப்பட்டிருக்கிறார். 

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்தும் குறைந்தது 4 லட்சம் பேரை மாநாட்டில் பங்கேற்க வைக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க - 'நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்...' உதயநிதி ஸ்டாலின் - துணை முதல்வர் பதவி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் படிக்க - தவெக மாநாடு! மவுனமாய் காய் நகர்த்தும் விஜய்.. எந்தெந்த கட்சிகளுக்கு சவால்

மேலும் படிக்க - முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகும் தளபதி 69! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News