டெல்லி: கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பை அடுத்து கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், சபாநாயகர் நடவடிக்கைகைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்களான அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏற்கனவே திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவரச வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.