அதிமுக கட்சியை தொடங்கியவரும் முன்னாள் முதல்வருமாகிய எம்ஜிஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு தினமானது இன்று அனுசரிக்கப்பட்டது. திருவொற்றியூர் தேரடி பகுதியில் நினைவு தினத்தை போற்றும் விதமாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் தலைமையில் 500 பேருக்கு புடவை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பொன்னைய்யன் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, இரட்டைஇலையை முடக்குவோம் என்பவர்கள் அரசீயல் தெரியாத சட்டம் தெரியாதவர்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், இரட்டை இலையை முடக்குவோம் என்பவர்கள் மண்ணை கவ்வுவார்கள் என்றார். 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சிஇருக்காது என டிடிவி தினகரன் கூறியது தொடர்பான கேள்விக்கு, 2026தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் இருப்பாரா? என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து 200 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக தலைவர் சொல்வது, அவர் கோமாவிலும் மயக்கத்திலும் இருக்கின்றார் அதனால் அப்படி சொல்கின்றார் என்றார். அண்ணாவை போல அம்பேத்கரையும் இன்னொரூ கண்ணாக பார்க்கின்ற கட்சி அதிமுக. அதிமுக − தவெக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, விஜய்யுடன் அதிமுக கூட்டணி என்பது தகவல் தான் உண்மையல்ல. கூட்டணி என்று நாங்கள் கூறினோமா? என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி
அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், 2026ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியை கொண்டு வர கடுமையான பாடுபட வேண்டும் என தொண்டர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது காவல்துறை செயலிழந்து விட்டது என்பதற்காக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது.
திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி, சாதிக் பாஷா ஆகியோரின் வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல தமிழக மக்களுக்காக பொற்கால ஆட்சி நடைபெறவில்லை முதலமைச்சரின் குடும்பத்திற்காக பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆருக்கும் - பிரதமர் மோடிக்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றது என பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு, எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவரை போல யாரும் பிறக்கவும் முடியாது. திமுகவில் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் ஜொலிக்கிறார்கள், கலைஞரை கூட மறந்துவிட்டார்கள். அதனால் தான் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவரது பெயரை வைக்கிறார்கள்.
டி.டி.வி.தினகரன் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார், அதிமுக தனித்து நின்று வெற்றி பெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார், மாற்றுக் கட்சி கருத்துக்கள் எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது, 2026 அதிமுக கூட்டணி எப்படி இருக்கும் என்கிற கேள்விக்கு, அதிமுக தலைமையில் கூட்டணி என ஏற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க யார் உறுதுணையாக இருந்தாலும் அவர்களோடு கூட்டணி வைப்போம், இந்த நிபந்தனைகளை சசிகலா, டி.டி.வி தினகரன் ஏற்றுக் கொண்டால் அவர்களை அதிமுகவில் இணைப்பீர்களா என்ற கேள்விக்கு, சசிகலா, டி.டி.வி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார், பாப்கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி உயர்த்துவது கண்டனத்திற்குரியது. ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறினார்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ