அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது...!
அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று மாலை 4 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் 300 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில், திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அத்துடன், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.