தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம் ), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கான கேள்வி நேரத்தின் போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் புதிதாக கல்லூரிகள் தொடங்கப்படுமா ? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஓர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரியும் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | இசைஞானி நம்மை ஒன்றிணைப்பார் - மதுரையில் பாஜக அடித்த போஸ்டர்
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23 ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளததாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுதவிர, ஓர் அரசு பொறியியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் இயங்குவதாகத் தெரிவித்த அமைச்சர் பொன்முடி, 14 சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகளும் நெல்லையில் இயங்குவதாக கூறினார். இத்தனைக் கல்லூரிகள் இருக்கும்நிலையில், தொகுதியில் உள்ள மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதால் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இந்த கேள்வியை அரசு வந்தவுடன் முதன்முதலில் முன்வைத்ததாகவும், அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்தார் எனவும் தெரிவித்தார். அதற்காக நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன், ஏற்கனவே நன்றி சொல்லிட்டாலும், தற்போது இரண்டாம் முறை நன்றி சொல்வதாகவும் கூறினார்.
மேலும் படிக்க | போராட்டக்காரர்களுக்கு சாலை ஓரத்தில் இடம் ஒதுக்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை
அதேபோல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு 30 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறிவுறுத்தல் பெயரில் அறநிலையத் துறை அமைச்சர் பல்வேறு திட்டங்களைக் கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், நெடுஞ்சாலை துறை அமைச்சர், முதலமைச்சர் அறிவுறுத்தல்படி புறவழிச் சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் என அறிவித்ததையும் குறிப்பிட்டுப் பேசினார். அதேபோல் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையத்துக்காக 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருநெல்வேலியில் அமைத்துத் தரப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை எடுத்துரைத்தார். இப்படித் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சிபேதம் பார்க்காமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தருவதற்கு மனமார்ந்த நன்றி என்று சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பாராட்டுத் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR