Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேரம் மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் மகேஷ், அஞ்சலி திருமணத்திற்காக எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: மகேஷ், அஞ்சலி திருமணத்திற்காக எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்கும் வேலைகள் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அதாவது, கவிதா எல்லாருக்கும் நேர்ல போய் பத்திரிக்கை கொடுக்குறீங்க ஆனா எங்க அம்மாவ கண்டுக்காம விட்டுட்டீங்க என்று லஷ்மியிடம் கவலை கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் கவிதாவின் அம்மா வீட்டுக்கு வருகிறாள்.
உன் மாமியார் தான் என்னை நேரில் சந்தித்து புடவை எல்லாம் எடுத்துக் கொடுத்து கல்யாணத்துக்கு அழைத்ததாக சொல்ல கவிதாவுக்கு லட்சுமியின் மீதான மரியாதை அதிகம் ஆகிறது.
அடுத்ததாக எல்லோரும் மண்டபத்திற்கு வந்து விடுகின்றனர். அஞ்சலியின் தோழிகள் வர கவின் குறித்து விசாரிக்க கவின் எங்களது ஃபோனையும் எடுக்கவில்லை. காலேஜுக்கும் வரவில்லை என சொல்கின்றனர்.
பிறகு தீபா அம்மாவுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்க உங்க அப்பா மீட்டிங் போய் இருக்காரு வந்துடறேன் என சொல்கிறாள்.. பிறகு வெற்றி பெற உங்க அக்காவோட நாத்தனாருக்கு கல்யாணம் என்ன மண்டபத்துல விடுறியா என்று கேட்க வெற்றி கோபப்படுகிறான்.
பிறகு வெற்றியின் அம்மா ஆட்டோவில் கிளம்பி கல்யாணத்திற்கு வருகிறாள். வெற்றி கோபமாக இருக்கும் விஷயத்தை சொல்ல தீபா அப்பா மனசு மாறியது போல வெற்றியும் ஒருநாள் மனசு மாறுவான் என்று சொல்கிறாள்.
மகேஷ் மண்டபத்திற்கு வர அவனை ஆரத்தி எடுத்து வர வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து அஞ்சலிக்கு நலங்கு வைக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. கவிதாவின் அம்மா மற்றும் தீபாவின் அம்மா என இருவரும் சந்தித்துக் கொண்டு நண்பர்களாகின்றனர். கவிதாவின் அம்மா உனக்கு இப்படி நலங்கு வச்சி எல்லாம் பண்ணனும் என்று ஆசைப்பட்டதாக வருந்துகிறாள்.
பிறகு அஞ்சலி கவினை திட்டி வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதைக் கேட்ட கவின் வருத்தப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | டிராகன் vs NEEK - முதல் நாள் வசூல் எவ்வளவு...? இளைஞர்களை கவர்ந்தது எந்த படம்...?
மேலும் படிக்க| வெற்றி பெற்ற ஃபயர் படம்! பாலாஜிக்கு தங்க செயின் பரிசு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ