மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

Last Updated : Apr 25, 2017, 02:16 PM IST
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க தடை title=

தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்க தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுகவினர் வழக்கு தொடர்ந்தார். 

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கூறியதாவது:-

சுற்றறிக்கையில் தேசிய நெடுஞ்சாலையை மாற்ற முடிவு என தவறுதலாக வந்துவிட்டது. மாநில நெடுஞ்சாலைகளை தான் மற்ற உள்ளோம். மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க முயற்சி செய்யவில்லை. மத்திய, மாநில நெடுஞ்சாலை என பிரிக்கும் முன்னார் உள்ளாட்சி வசம் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து, அங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதியளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைக்கப்பட்டாலும் ஜூன் மாதம் வரை டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. கோடைகால விடுமுறைக்கு பின்னர் ஜூலை 10-ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் எனக்கூறியது.

Trending News