சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் இவர் அந்த பகுதியில் சிமெண்ட் ஜல்லி விற்பனை செய்யும் தொழில் நடத்திவருகிறார். இவர் இதே பகுதியில் ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் திருப்பதிசாமி பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 80,000 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார்.
ஊரடங்கு காலத்திலும் வாங்கிய பணத்திற்கு வட்டியையும் கட்டி வந்திருக்கிறார். எனினும் திருப்பதிசாமி பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து தொடர்ந்து அதிகமான வட்டி கட்ட சொல்லி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அதற்கு கந்தன் நான் முழு தொகையும் தந்துவிடுகிறேன் வட்டியை குறைக்கும்படி கேட்டிருக்கிறார். அதை ஏற்க மறுத்த பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் வந்தும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | கேரளாவை உலுக்கிய விஸ்மயா கொலை வழக்கு - கணவர் குற்றவாளி எனத் தீர்ப்பு
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவிட்டு, என் சாவுக்கு ஃபைனான்ஸ் நிறுவனம் தான் காரணம் என கூறி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இன்று மதியம் ஆகியும் நீண்ட நேரம் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் தற்பொழுது உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் உள்ளே சென்று கோஷம் எழுப்பி வருவதால் பெரும் பதட்டம் என்பது நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பிற்காக, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மீண்டும் ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்த வரதட்சணை கொடுமை!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR