TamilNadu Assembly Elections 2021: திமுக கூட்டணியில் அடுத்த தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியானது. DMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஏப்ரக் ஆறாம் தேதியன்று தமிழகத்தில் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
CPI gets 6 seats in the DMK alliance, for the upcoming #TamilNaduElections2021 pic.twitter.com/t2EUuXW79A
— ANI (@ANI) March 5, 2021
அந்த வகையில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் பல கட்டங்களாக தொகுதிப் பங்கீடு குறித்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது CPI 6 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
Also Read | DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அதேபோல், திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "மார்ச் 7 இல் லட்சியப் பிரகடனம் வெளியீடப்படும்; மார்ச் 10-ல் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மார்ச் 11ஆம் தேதியன்று தேர்தல் களத்தின் கதாநாயகனான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பிலே இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR