அவதூறு வழக்கு - எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு

முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி  தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 12, 2022, 09:17 PM IST
  • முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேச்சு
  • திமுக எம்.பி.ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு
  • எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கு - எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு title=

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட  முடியுமா என்றும் பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பியதாக உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் முருகன் எம்பி ஆனதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

highcourt

மேலும் படிக்க | காணொளி காட்சி விசாரணை- பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞர்..!

இந்த நிலையில் நீதிபதி அலிசியா முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதி அடுத்த விசாரணைக்கு எல.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த  நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | தங்கச் சங்கிலிக்காக ‘நண்பனின் தாயை’ இரும்பு ராடால் அடித்து கொல்ல முயன்றவர் கைது..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News