குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய அற்புதமான காய்கறி..!

Diabetics, Bitter Gourd | குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் செரிமானத்தை மேம்படுத்தி, குளுக்கோஸ் சீராக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 27, 2024, 08:09 AM IST
  • நீரிழிவு நோயாளிகள் முக்கிய அப்டேட்
  • பாகற்காய் சர்க்கரையை கட்டுப்படுத்தும்
  • இன்சுலின் சுரப்பை சீராக்கும் வல்லமை உண்டு
குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய அற்புதமான காய்கறி..! title=

Diabetics, Bitter Gourd Benefits Tamil | இன்சுலின் சுரப்பில் ஏற்படும் அபரிமிதமான மாற்றமே நீரிழிவு நோய். இந்த நோயின் பாதிப்பு ஆரோக்கியத்தில் மிகப்பெரிய சிக்கலையும், மன உளைச்சலையும் கொடுக்கக்கூடிய ஒன்று. அதனால், நீரிழிவு நோய் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. உணவு, உடற்பயிற்சி என இரண்டிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே நீரிழிவு நோய் சீராக வைத்துக் கொள்ள முடியும்.

நீரிழிவு நோய் அறிகுறிகள்

நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் போதும், குறையும் போதும், கிட்டத்தட்ட இதே போன்ற அறிகுறிகள் உடலில் காணப்படும். வியர்வை, சோர்வு மற்றும் பலவீனம், எரிச்சல், பதட்டம் அல்லது மனக் குழப்பம், உடல் நடுக்கம், மங்கலான பார்வை, விரைவான இதயத் துடிப்பு, பசி, தலைவலி, தலைசுற்றல், மனக் குழப்பம், அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல் மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரியும்.

நீரிழிவு நோய் காய்கறி

 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலத்திற்கு அதிகமாக இருந்தால், உடலில் பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் பாகற்காய்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காய் ஒரு காய்கறி ஆகும், அதன் சுவை கசப்பாக இருந்தாலும் அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த காய்கறி ஆரோக்கியத்திற்கான தேன், இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது. பாகற்காயை குளிர்காலத்தில் வெள்ளரி மற்றும் தக்காளியுடன் சேர்த்து சாப்பிடும்போது நீரிழிவு நோய் எளிதில் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் படிக்க | நரம்பு தளர்ச்சி முதல் நீரிழிவு வரை... ஆப்பிளை விட அதிக சத்துக்கள் நிறைந்த கொய்யா உதவும்

பாகற்காய் பலன்கள்

பாகற்காய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும். நாள் முழுவதும் இரத்த சர்க்கரை சீராக இருக்கும். இந்த ஜூஸை குடிப்பதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அனைத்தும் உடலில் இருந்து வெளியேறும். நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த, சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி செய்யும்போது அவர்களின் ரத்த சர்க்கரையை எளிதில் சீராக்க முடியும். 

பாகற்காய் சர்க்கரையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

பாகற்காய் என்பது பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, தயாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பண்புகளைக் கொண்ட ஒரு காய்கறி. இது கணையத்தின் பீட்டா செல்களுக்கு ஆற்றலை வழங்குகி இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் பாகற்காய் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம். பாகற்காயில் இன்சுலின் போன்று செயல்படும் குணங்கள் உள்ளன. இந்த காய்கறி இயற்கையாகவே உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் ரத்த சர்க்கரையை இயல்பாக்குகிறது.

பாகற்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் சரியாகப் பயன்படுத்த உதவுகிறது. இந்த காய்கறி கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியை கட்டுப்படுத்தும் அளவுக்கு சக்தி கொண்டது. பாகற்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. பாகற்காய் சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

பாகற்காய் சாப்பிடுவது எப்படி? 

பாகற்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம். இந்த ஜூஸில் இஞ்சி சாறு சேர்த்தும் குடிக்கலாம். பாகற்காயை காய்கறியாகவும் சாப்பிடலாம். பொரித்தோ, ஆவியில் வேகவைத்தோ அல்லது கறி செய்தும் சாப்பிடலாம். பாகற்காயை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள், அதுவே ஆரோக்கியத்திற்கு போதுமானது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உடல் எடையை எளிதாக குறைக்கணுமா? உங்களுக்கு உதவும் மஞ்சள் காபி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News