புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (M. K. Alagiri) தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஸ்டாலின் எனக்கு துரோகம் செய்தார்? நான் என்ன செய்தேன் என்று அழகிரி தனது மனக்குமுறலை வெளியிட்டார்.
மதுரையில் வசிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (M. K. Alagiri) தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.. மதுரையில் பாண்டிகோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபபத்தில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Also Read | இனி சென்னையை சுற்றி வரும் கில்லி சாய்: ஆட்டோக்களில் வரும் Tea and Snacks!!
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. கருணாநிதியை திமுக (DMK) மறந்துவிட்டது என்றும், மு.க.ஸ்டாலினால் (M. K. Stalin) முதல்வராக முடியாது என்று தெரிவித்த அழகிரி, நான் முதல்வராக விரும்பவில்லை என்றும் குறிப்பிடார்.
தான் பலருக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருப்பதாகவும், ஆனால் யாருக்குமே நன்றியில்லை என்றும் கூறினார். எதையும் சந்திக்க தயாராக இருங்கள் என்று கூறிய அழகிரி, நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார் அழகிரி.
திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணம் பணம் அல்ல, கருணாநிதியின் (M. Karunanidhi) உழைப்பு தான் காரணம் என்றார். நான் ஒருபோதும் பதவியை விரும்பவில்லை, கலைஞருக்கு நிகர் அவர் மட்டுமே, அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்றும் அழகிரி தெரிவித்தார்.
எனக்கு பதவி கொடுக்க முயன்றபோதும், கலைஞருக்கு (M. Karunanidhi) பிறகு மு.க.ஸ்டாலின் தான் என்று நான் எப்போதுமே தெரிவித்திருக்கிறேன், ஸ்டாலினுக்கு (M. K. Stalin) துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு முன்னரும், கலைஞர் என்னிடம் கருத்து கேட்ட பிறகு தான் அந்த முடிவை எடுத்தார் என்று பல விஷயங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார் அழகிரி.
Also Read | 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் சென்னையில் குற்றங்கள் குறைவு!
நான் என்ன தவறு செய்தேன், என்னை ஏன் கட்சியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறீர்கள் என்று எனது தந்தை, மு.கருணாநிதியிடம் கேட்டேன், “ஆடுபவர்கள் எல்லாம் ஆடி அடங்கட்டும், பொறுமையாக இரு” என்று சொன்னார். ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது என்று 7 ஆண்டுகளுக்கு பிறகு பல விஷயங்களை முன்னால் மத்திய அமைச்சர் அழகிரி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Election) நடைபெறவிருக்கும் நிலையில் அழகிரியின் இந்த பேச்சு, திமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலேயே பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிவிட்டது.
அழகிரியின் இந்த வெளிப்பாடு, மதில் மேல் பூனை போல் இருக்கிறது. ஸ்டாலின் (M. K. Stalin) சரியான முடிவெடுக்காவிட்டால், தான் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பேன் என்பதையே அழகிரியின் இன்றைய பேச்சு வெளிகாட்டுகிறது.
Also Read | கோயம்புத்தூர் விழா: COVID முன்னணி வீரர்களுக்கு சிறப்பு மரியாதை
தனக்கு கட்சியில் உரிய இடம் கிடைக்கவில்லை, தனது மகனுக்காவது பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கமே இன்றைய அவரது பேச்சுக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பல நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன.
இந்த மாத இறுதியில் தனது பிறந்தநாளன்று அழகிரியின் அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும், அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் தற்போது வதந்திகள் உலா வருகின்றன.
Also Read | தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு: 2 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR