நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்டும் நிலையில், எதிர்வரும் தேர்தலுக்கான தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தில் நேற்று முதல் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது.
அந்தவகையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்குவதற்கான கூட்டணி உடன்பாடு நேற்று கையெழுத்தானது.
இதற்கிடையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிகப்பட்டு இருந்தது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியானது. தமிழகம் மற்றதும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் புதுச்சேரி தொகுதியில் காங்கிரசஸ் கட்சி போட்டியிடும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரு கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கையெழுத்திட்டனர்.
DMK President MK Stalin: Out of total 40 seats, 9 Lok Sabha seats in Tamil Nadu & 1 seat in Puducherry have been given to Congress. https://t.co/fDD7w00e7P
— ANI (@ANI) February 20, 2019
தி.மு.க. 25 முதல் 28 இடங்களில் போட்டியிடும் எனத் தெரிகிறது. திமுக சின்னத்தில் போட்டியிடமாறு விடுதலை சிறுத்தை(VCK) மற்றும் மதிமுக(MDMK) திமுக தரப்பு கேட்டு வருவதாக தெரிகிறது. மற்ற கட்சிகளான இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகியவை தங்கள் சொந்த சின்னங்களில் போட்டியிடும் என திமுக-வின் முக்கிய நிர்வாகி தெரிவித்தனர்.