தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பலியாகியிருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தவறுதலாக பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவிற்கு 9-பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் 9-பேர் பலியாகியிருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட மூன்று மாவடங்களை தனிமைப்படுத்தி இருப்பது மக்களுக்கு அச்சத்தை தூண்டியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் அவர், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மூழு வீச்சில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பின்னர் இந்த ட்விட்டர் பதிவு தவறான தகவலை கொண்டிருப்பதை உணர்ந்து நீக்கப்பட்டது. இருப்பினும் ஆளும் கட்சி தலைவர்கள் உள்பட இணையவாசிகள் பலரும் திரு. ஸ்டாலின் அவர்களின் பதிவினை புகைப்படமாக இணையத்தில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்! pic.twitter.com/bBrjzc04DN— SP Velumani (@SPVelumanicbe) March 23, 2020
#FakenewsStalin pic.twitter.com/Wf3gHJmKvE
— Buhahaha (@ChummaKizhe) March 23, 2020
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது Don't esacpe with Photoshop excuse #FakeNewsStalin pic.twitter.com/vj8A97sq2J
— RajniMuthu (@RajiniMuthu80) March 23, 2020
எனினும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் சிலர், இந்த புகைப்படமானது போட்டோஸாப்-ஆல் உருவாக்கப்பட்டது எனவும், ஸ்டாலின் இவ்வாறான கருத்துகள் எதுவும் பரப்பவில்லை எனவும் வாதிட்டு வருகின்றனர்.