சென்னை: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6,7,8-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக தலைமயைாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத்தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினம் அந்த வகுப்புகளில் படித்து வந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தேர்வுக்கு முன்னரே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்த தகவல்கள், ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனையடுத்து அந்த வட்டாரத்தின் முதன்மைக் கல்வி அலுவர் அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | வினாத்தாள் 'லீக்' தடுக்க பள்ளிக் கல்வித் துறையின் திட்டம் இதுதான்
வட்டார முதன்மைக் கல்வி அலுவர் அ.பாலுமுத்துவின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கு முதல் நாளே வினாத்தாள்கள் கொடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் பல திடுக்கிடும் விவரங்கள் வெளியாகின. அறிவியல் பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியரிடம் வினாத்தாள்களை அந்த பள்ளியின் தலைமையாசிரியர் வழங்கியுள்ளார். தேர்வுக்கு முதல் நாளே வினாத்தாளைப் பெற்றுக் கொண்ட அறிவியல் ஆசிரியர் தேர்வுக்கு முதல்நாளே மாணவர்களிடம் வழங்கி விட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?
இந்த வினாத்தாளில் உள்ள கேள்விகளை நன்றாக படித்து வரவும் அறிவியல் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். இந்த வினாத்தாளை பட்டதாரி கணித ஆசிரியர் படம் பிடித்து வெளியிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.
அதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்த தலைமையாசிரியர் எம்.மீனாம்பர், கணித ஆசிரியர் வி.டி.குமார்வேல், அறிவியல் ஆசிரியர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | திலகவதி IPS மீது மருமகள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையா? திடுக்கிடும் தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ