முன்னாள் ஐஜி சிவனாண்டி கொலை மிரட்டல்: பிரபல துணிக்கடை உரிமையாளர் மகன் குற்றச்சாட்டு

முன்னாள் ஐஜி சிவனாண்டி கொலை மிரட்டல் விடுவதாக பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 27, 2022, 03:48 PM IST
  • முன்னாள் ஐஜி சிவனாண்டி கொலை மிரட்டல்
  • பிரபல துணிக்கடை உரிமையாளர் மகன் குற்றச்சாட்டு
  • பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சரண்டரான முருகனின் குற்றச்சாட்டு
முன்னாள் ஐஜி சிவனாண்டி கொலை மிரட்டல்: பிரபல துணிக்கடை உரிமையாளர் மகன் குற்றச்சாட்டு title=

முன்னாள் ஐஜி சிவனாண்டி கொலை மிரட்டல் விடுவதாக பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

கடந்த சில நாள்களாக தேனி மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படு சம்பவமாக பார்க்கபடுவது பிரபல ஜவுளி கடை உரிமையாளரின் மகன் முருகன் மீது தேனியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் சம்பவம் ஆகும்.

தன்னை திருமனம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கட்டாயமாக தாம்பத்ய உறவு கொண்டதாவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொண்ட நிலையில் வேறு பெண்ணை நிச்சியதார்த்தம் செய்து, தன்னை ஏமாற்றி விட்டதாக பாதிக்கபட்ட பெண் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் காவல்துறையினர் முருகன் மீது  4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட முருகன் தலைமறைவானார்.

மேலும் படிக்க | தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவருக்கு பேரவையில் இரங்கல் 

பின்னர் தேனி துணை காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்த முருகன், மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு தேனி அருகில் உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கபட்டார்.

இந்நிலையில் முருகன் தலைமறைவாக இருந்து துணை காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் சரணடைவதற்கு முன்பு பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவில் ஒய்வு பெற்ற, தமிழக (Tamil Nadu) முன்னாள் காவல்துறை ஐஜி சிவனாண்டி மூலம் தங்களின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டபட்டு வருவதாகவும், தன்னை கொலை செய்து வைகை அணையில் உடலை வீசி விடுவதாகவும் முன்னாள் ஐஐ சிவனாண்டி மிரட்டியதாக சொல்கிறார்.

காவல்துறையில் தனக்கு இருக்கும் செல்வாக்கினை வைத்து சிறையில் வைத்து கொலை செய்து விடுவதாக சிவனாண்டி மிரட்டல் விடுத்ததால்தான் தலைமறைவாகி இருந்து முன் ஜாமின் பெற முயற்சி செய்து வந்ததாகவும் அந்த ஆடியோவில் முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆளுநர் தனித்து முடிவு எடுக்க அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

ஒய்வுபெற்ற ஐஜி சிவனாண்டியின் வற்புறுத்தல் காரணமாகவே தனது குடும்பத்தினருக்கு காவல்துறை தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும், இதன் காரணமாகவே தான் காவல்துறையினரிடம் சரணடைந்து உள்ளதாகவும் அந்த வீடியோ குரல் கூறுகிறது.

எனவே, காவல்துறையில் சரணடைந்த பின்னர் தனக்கு சிறையில் ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஐஜி சிவனாண்டி தான் பொறுப்பு என்றும் முருகன் தெரிவித்துள்ளார்.

தன்னை காப்பாற்றுமாறு அவர் சரணடைவதற்கு முன்பாக தமிழக முதல்வர், தலைமை செயலாளர், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அவர் கைப்பட கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நாள்தோறும் அடுத்தடுத்த திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கும் பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் மீதான பாலியல் சம்பவ வழக்கில் அடுத்த அத்தியாயமாக முன்னாள் ஐஜி சிவானாண்டியின் பெயர் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | முந்தையை அதிமுக அரசின் அலட்சியமே அரசு மருத்துவமனையில் தீ விபத்து: அமைச்சர் விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News