தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Aug 4, 2019, 02:33 PM IST
தமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: வானிலை மையம் title=

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 சென்டிமீட்டரும், சாத்தான்குளம் மற்றும் நீலகிரி மாவட்டம் ஜி பஜாரில் 2 சென்டிமீட்டரும், ராதாபுரம் மற்றும் பேச்சிப்பாறையில் 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து தமிழக வேதேர்மன் வெளியிட்டுள்ள குறிப்பில்; “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், கேரளா மற்றும் தமிழக மலைத் தொடர் பகுதிகளில் (வால்பாறை, நீலகிரி, பெரியார் நீர்ப்பிடிப்பு, நெல்லை மலைத் தொடர், கன்னியாகுமரி) வரும் திங்கட்கிழமை முதல் மழை அளவு அதிகரிக்கும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளை உள்ளடக்கிய KTC மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வெப்ப சலனத்தால் மழை உருவாகும். அங்கும் இங்குமாக மழை பெய்யத் தொடங்கும். ஆனால், ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு அனைத்தும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை நீங்கள் நிறைய டமால் டுமீல்கள் மற்றும் ரெட் தக்காளி ஸ்பெல்களை பார்க்கலாம். யார் யாரெல்லாம் மழை நீர் சேமிப்புக்கு தயாராகவில்லையோ, அவர்களுக்கு அடுத்தக் கட்ட மழையில் சேமித்துக் கொள்ள ஒருவார காலம் நேரமிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

 

Trending News